• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-21 06:58:07    
உலக மகளிர் வாலிபால் பரிசு போட்டி

cri

மலேசிய பூப்பந்து ஒப்பன் போட்டி ஜூலை திங்கள் 10ஆம் நாள் கோலாலம்பூரில் நிறைவடைந்தது. மகளிர் ஒற்றையர் போட்டி, மகளிர் இரட்டையர் போட்டி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் சீன அணி சாம்பியன் பட்டம் பெற்றது. மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியனும் உலக சாம்பியன் பட்டப் போட்டியின் சாம்பியனுமான சாங் நிங் 2-0 என்ற செட் கணக்கில் தனது சகநாட்டவரான சூ லின்னைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் இரட்டையர் போட்டியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியனான யாங் வேய், சாங் ச்சியே வென் ஜோடி 2-0 என்று செட் கணக்கில் தமது சகநாட்டவர்களான கௌ லிங், ஹுவாங் சுய் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

வாலிபால் 2005 உலக மகளிர் வாலிபால் பரிசு போட்டி ஜூலை திங்கள் 10ஆம் நாள் நிறைவடைந்தது. கடைசி போட்டியில் சீன அணி 0-3 என்ற செட் கணக்கில் இத்தாலி அணியிடம் தோல்வி கண்டு, இந்த சுற்றுப் போட்டியில் இரண்டு வெற்றி ஒரு தோல்வி என்ற நிலையில் இரண்டாம் இடம் பெற்றது. இத்தாலி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த பரிசு போட்டியின் மூற்று சுற்றுக்களில் சீன அணி மொத்தம் எட்டு வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றுள்ளதால் ஜூலை 13ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை ஜப்பானின் சென்தையில் நடைபெறும் பொது இறுதி போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது.

2005 உலக ஆடவர் வாலிபால் போட்டியின் பொது இறுதிப் போட்டி ஜூலை திங்கள் 10ஆம் நாள் பெல்கிரேடில் நிறைவடைந்தது. பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியைத் தோற்கடித்து மூன்றாம் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. அத்துடன் பத்து லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகையையும் அது பென்றது. கியூபா அணி மூன்றாம் இடம் பெற்றது.

கூடைப் பந்து ஜீஹுவா கோப்பைக்கான நான்கு நாடுகளின் மகளிர் கூடைப் பந்து போட்டி ஜூலை திங்கள் 10ஆம் நாள் சீனாவின் ஹார்பின் நகரில் நிறைவடைந்தது. அன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் சீன அணி 77-85 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்டு, இரண்டாம் இடம் பெற்றது. ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கியூபா அணி மூன்றாம் இடத்தையும் ரஷியா நான்காம் இடத்தையும் வென்றன.

கார் ஓட்டப் போட்டி 2005 உலக F1 கார் ஓட்ட சாம்பியன் பட்டப் போட்டி ஜூலை திங்கள் 10ஆம் நாள் பிரிட்டனின் SIVERSTONE ஓட்ட தடத்தில் நிறைவடைந்தது. மைக்லைலன் அணியைச் சேர்ந்த கொலம்பிய வீரர் JUAN OABLO MONTOYA இந்த சுற்றின் சாம்பியன் பட்டம் பெற்றார்.