அறிவியல் உலகத்தை நேயர்கள் பாராட்டினர்
cri
வி-------அடுத்த கடிதம்
ரா-------தருமபுரி மாவட்டம் ராமியம்பட்டி நேயர் சீ பாரதி அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய ஆசைப்படு, பெரிதாக ஆசைப்படு நிகழ்ச்சி அட்டகாசமானது என்று பாராட்டிவிட்டு, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், மாவட்ட வாரியாக எப்போது ஊக்கம் தருவீர்கள் கேட்கிறார்,.
வி------பாராட்டுக்கு நன்றி, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கூடுமானவனர எல்லாப் பிரிவு நேயர்களுக்கும் முக்கியத்துவம் தர முயற்சிக்கிறோம்.
ரா-----இலங்கை காத்தான்குடி நேயர் எம் ஏ எம் சஹான் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி நேயர் முத்துப்பாண்டியன் கடந்த ஏப்ரல் 3ம் நாள் சீன இசை நிகழ்ச்சியில் பாடிய பெண்ணின் குரல் வயலின் இசைத்தது போன்று இருந்தது. எனக்கு சீனர்களிடம் மிகவும் பிடித்தது. அவர்களுடைய குழந்தைத்தனமான முகம், தாய் மொழிப் பற்று, கலாச்சாரம், தற்போது மாற்று கலாச்சரத்தினரையும் மதிக்கும் மனப்பாங்கு என்று பாராட்டுகிறார். இவர் இப்படி பாராட்டக் காரணம் சீனாவில் முஸ்லிம் உணவுப் பழக்கங்களுக்கு மரியாதை தரப்படுவது பற்றிய நமது நிகழ்ச்சி.
வி------பாராட்டுக்கு நன்றி. ராஜா, மின்னஞ்சல்கள் உண்டா
ரா------ஒ. நிறைய உண்டு.
கிருஷ்ணகிரி நேயர் R மாதவர்மன் சீன வானொலி நிகழ்ச்சிகள் பயனுள்ளவை என்கிறார். சீனாவுக்கு வருகை தந்த வி தி ரவிச்சந்திரன் தமது பயண அனுபவங்களைத் தொகுத்து வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி பற்றி சில கருத்துக்கள் மின்னஞ்சலில் வந்துள்ளன. இந்த நிகழ்ச்சி சுவையாக இருந்தது என்று விழுப்புரம் நேயர் எஸ் பாண்டியராஜன் எழுதியுள்ளார். மேலும் சீன வானொலி பற்றியும், நேயர்கள் பற்றியும் ரவிச்சந்திரன் கூறிய கருத்துக்களை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு தமது நினைவுகள் சிறகடித்துப் பின்னோக்கிப் மறந்தன என்று கூறுகிறார் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் வானொலி கேட்டு கடிதம் எழுதுவது ஒரு சுகமான அனுபவம், உண்மையில் அப்போதைய காலம் ஒரு பொற்காலம். எங்களைப் போன்ற ஒரு சில நேயர்கள் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்திக் கொண்டு, கருத்துக்கடிதங்களை ஏராளமான அளவில் எழுதிக் குவித்தோம். ஓர் ஆண்டில் நான் இத்தனை கடிதங்கள் எழுதினேன் என்று கூறிக் கொள்வதில் தான், அப்போது உண்மையான கௌரவம். இலவசக் கடித இறைகள் இல்லாத காலக்கட்டத்தில் ஆயிரக் கணக்கில் விமர்சனக் கடிதங்களை எழுத இயல்பான ஆர்வம் இருக்க வேண்டும். அந்த உயல்பான ஆர்வம் கொண்ட நேயர்கள சீன வானொலியின் அடித்தளங்கள் என்று கூறலாம்.
கருப்பட்டி கே பிரபாகரன் தமது மின்னஞ்சலில், ரவிச்சந்திரன் தனிமையில் பதிவு செய்த உரையில் எல்லா விஷயங்களையும் கூற முடியவில்லை. யாராவது பேட்டி எடுத்திருதால் இன்னும் நிறைய தகவல்களைக் கூறியிருப்பார் என்று கூறுகிறார்.
இவர் மலர் விழி வழங்கிய சீனாவில் இன்ப பயணம் நிகழ்ச்சியில் வர்ணனை மிகவும் சரளமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். டாக்டர்கள் தின்மான ஜூலை முதல் தேதி அக்குபங்சர் மருத்துவம் பற்றிய நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்கிறார் மதுரை நேயர் எஸ் பாண்டியராஜன் கலையரசியுடன் செல்வம் நடத்திய கேள்வியும் பதிலும் உரையாடலில் சீன வானொலி வளர்ச்சியில் எஸ் எம் எஸ் சேவை பற்றிக் குறிப்பிட்டார். செல்லிட பேசி வைத்திருக்கும் எல்லா நேயர்களும் இந்த sms நெட்டில் சேர வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த சேகர் தமது மின்னஞ்சல்களில் இந்து பத்திரிகையாளர் நிருபமா சுப்பிரமணியன் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் நிறையத் தகவல்கல் கிடைத்தன. சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்ற கட்டுரையில் சீன அழகு பற்றி இது வரை அறியப்படாத பல தகவல்கள் தெரிந்தன என்று பாராட்டியுள்ளார். சீன வானொலி இணைய தளத்தில் சீன வானொலி இணைய தளத்தில் CHINA ABC என்ற புதிய இணைய பக்கத்தைக் கண்டேன். கண்டதும் மெய்சிலிர்த்துப் பரவசப் பட்டுவிட்டேன். காரணம் இதில் சீனாவைப் பற்றிய ஏராளமான தகவல்கள் குவிந்துள்ளன என்று வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் பாராட்டியுள்ளார்.
|
|