• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-19 15:39:37    
Andean சமூகம்

cri
Andean சமூகத்தின் 16வது உச்சி மாநாடு 18ஆம் நாள் பெரு நாட்டுத் தலைநகர் லிமாவில் நடைபெறும். Andean சமூகம், லத்தின் அமெரிக்க நாடுகளின் மண்டலப் பொருளாதார நிறுவனம். லத்தின் அமெரிக்காவில் மிகவும் முன்னதாக நிறுவப்பட்ட வட்டார ஒருமைப்பாட்டு நிறுவனமும் ஆகும். அதன் தலைமையகம், பெருவின் தலைநகரான ரிமாவில் உள்ளது. 1969ஆம் ஆண்டு மே திங்களில் நிறுவப்பட்ட Andean சமூகத்தில் தற்போது, பொலிவியா, கொலம்பியா, ஈக்குவடார், வெனிசுவலா, பெரு ஆகிய 5 உறுப்பு நாடுகள் உள்ளன. ஆஸ்திரேலியா, பிரான்சு உள்ளிட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இந்தச் சமூகத்துக்குத் தத்தமது பார்வையாளர்களை அனுப்பியுள்ளன. பனமா, அதன் நிரந்தரப் பார்வையாளர் நாடாகும். இவ்வட்டாரத்தின் மூல வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி, சமூகத்தின் உறுப்பு நாடுகள் சமமாகவும் ஒருங்கிணைந்தும் வளர்வதை மேம்படுத்தி, பல்வேறு நாடுகளுக்கிடையிலான காப்பு வரித் தடையை நீக்கி, பொதுச் சந்தையை உருவாக்கி, பொருளாதார ஒருமைப்பாட்டை வளர்ப்பதே இச்சமூகத்தின் நோக்கம். அரசு தலைவர் கவுன்சிலானது, Andean சமூகத்தின் உயர் நிலை கொள்கை வகுக்கும் அமைப்பாகும். இது சமூகத்தின் ஒருமைப்பாட்டு வளர்ச்சிப் போக்கின் குறிக்கோளை நிர்ணயிக்கும். ஆண்டுதோறும் ஒரு கூட்டம் நடைபெறும். வெளியுறவு அமைச்சர் கவுன்சில், இச்சமூகத்தின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களால் உருவாக்கப்பட்டது. உறுப்பு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையை ஒருங்கிணைப்பதற்கு அது பொறுப்பு ஏற்கிறது. ஓர் ஆண்டுக்குக் குறைந்தது 2 தடவை இதன் கூட்டம் நடைபெறும். தலைமைச் செயலகம், Andean சமூகத்தின் நிர்வாக நிறுவனம். Andean சமூகத்தின் சார்பில் இதர ஒருமைப்பாட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் அதற்கு உண்டு. இச்சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு உறுப்பு நாடுகளின் அரசு தலைவர்களால் நியமிக்கப்பட்ட முழு அதிகாரமுடைய பிரதிநிதிகள் ஆணையத்தை உருவாக்கி, ,வெளியுறவு அமைச்சர் கவுன்சிலுடன் இணைந்து ஒருமைப்பாட்டுக் கொள்கையை வகுப்பார்கள். அத்துடன், கொள்கைகள் செயல்படுத்தப்படுவதையும் கண்காணிப்பர். Andean நாடாளுமன்றம், Andean சமூகத்தின் ஆலோசனை நிறுவனமாகும். 2003ஆம் ஆண்டு ஜுன் திங்கள் வரை, Andean சமூகத்தைச் சேர்ந்த 5 நாடுகளின் மொத்த மக்கள் தொகை 12 கோடியை எட்டியுள்ளது. 2002ஆம் ஆண்டு அதன் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 30 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. லத்தின் அமெரிக்க வட்டாரத்தில் ஒரு முக்கிய சந்தையாக இது திகழ்கின்றது. 2004ஆம் ஆண்டு ஜூலை திங்களில் Andean சமூகத்தின் 15வது உச்சி மாநாடு ஈக்குவடாரின் தலைநகரான Quitoஇல் நடைபெற்றது. Andean சமூகத்தைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் அரசு தலைவர்கள் இம்மாநாட்டில் Quito உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.