• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-19 15:36:05    
வேண்டுகோள்

cri
ராஜா-------வணக்கம் நேயர்களே, நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். மெய்மெய் விஜயலட்சுமி, இன்றைய கடிதக் கட்டைப் பிரிக்கலாமா வி--------கக்கக்கா, ராஜா, கடிதங்களைப் படியுங்கள் முதலில் யார் எழுதிய கடிதம் ரா--------நேயர் எண் 077457 ஆர் தங்கமணி இவர் கடிதத்தாளில் முகவரி எழுதவில்லை. இவரைப் போலவே பல நேயர்கள் உறையில் முகவரி எழுதி விட்டை, கடிதத்தாளில் எழுத மறந்து விடுகிறார்கள். கடந்த 12-05-2005 அன்று ஒலிபரப்பான பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற அறிவியல் உலகம் நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். ஆர், தங்கமணி, கே சிவக்குமார் என்ற நேயர் தமது முதல் கடிதம் எழுதியிருக்கிறார். இவரும் கடிதத்தாளில் முகவரி எழுதவில்லை. இவர் தமிழ் நாளேட்டில் சீனா பற்றி வெளியான செய்திகளை தொகுத்து எழுதியிருக்கிறார். ஒரத்த நாடு என்ற ஊரில் இருந்து ஒரு நேயர் கடிதத்தாளில் தமது பெயரைக் குறிப்பிடவில்லை. இவர் சீன வானொலி ஒலிபரப்பும் வெளி நாட்டுச் செய்திகள் மாணவரான தமக்கு மிகவும் பயன் தருவதாக எழுதியுள்ளார். இணைய தளம் பார்க்க முடியவில்லை என்கிறார். வி-------நேயர்களே. நீங்கள் எழுதும் கடிதத் தாளிலும் கடித உறையிலும் மறக்காமல் உங்களுடைய பெயர் ஊர் முகவரி மற்றும் நேயர் எண் எழுதப்பட வேண்டும். அப்போது தான் எங்களுக்கு வந்த கடிதங்களை வகைப்படுத்துவது எங்களுக்கு எளிதாக இருக்கும், நேயர் எண் உங்களுக்கு நாங்கள் அனுப்பும் கடித உறையில் உள்ளது. எமது இணையத்தைப் பார்ப்பதற்கு என்ற இணைய முகவரியை அணுச்சும், ராஜா அடுத்த கடிதம் ராஜா-------சென்னையில் இருந்து ஒனசேகர் ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகளை பாராட்டியுள்ளார். பெரும்பாலான நேயர்கள் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே, விவகாயம் போன்ற கிராமம் சார்ந்த தகவல்களை நிறைய ஒலிபரப்புங்கள் என்கிறார். மதுரை நகர் க ராமரங்கம் தம்முடைய கடிதத்தில், நமது மே திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டி விட்டு, நமது நிகழ்ச்சிகள் மூலம் சீனாவில்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தூண்டப்பட்டதாகக் கூறுகிறார். சென்னை திருவல்லிக் கேணி நேயர் எஸ் ரேணுகா தேவி, தமது மே திங்கள் கடிதத்தில் நமது ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றையும் பாராட்டியுள்ளார். உணவு அரங்கம் நிகழ்ச்சி அரைத்த மாவையே திரும்ப அரைப்பது போல் இருக்கிறதே என்கிறார். அதே வேளையில் பெய்ச்சிங்கில் உள்ள இந்தியா சிச்சன் உணவுக் கலைஞர் சதீஷ், கூறிய தக்காளி முட்டைச் சாதம் வித்தியாசமான உணவு என்று பாராட்டுகிறார். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் அமெரிக்கக் கழுகுகளின் ஒலி சீனக் குழுகுகளுக்கு புரியவில்லை என்ற செய்தி சிரிப்பை வரவனழ்ததது என்கிறார் ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் நேயராக சேரலாம் என்று கேட்கிறார் எம் ஜ எம் ப் அஸ்மா இவருடைய நேயர் எண் 077592. கடிதத்தாளில் முகவரி இல்லை.