• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-21 11:52:55    
பழஞ்சீனாவின் புகழ் பெற்ற மருத்துவர்கள்

cri
அடுத்து நாம் காண விருக்கும் புகழ்பெற்ற மருத்துவரின் பெயர் சுன் சிமியாவ். நோயாளிகளுக்கு எழுதிக் கொடுத்த நோய் விவரக் குறிப்புகளைத் தொகுத்து 2 நூலாக வெளியிட்டார். முதலாவது நூலில் 5300 நோய் விவரக் குறிப்புகளும் இரண்டாவது நூலில் 2000க்கும் மேற்பட்ட நோய்விவரக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

ஒரு முறை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சவப் பெட்டியைத் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் சுன். "ஏன், என்ன காரணம்?"என்று விசாரித்தனர். "இறந்து போகாத ஒருவரை ஏன் அடக்கம் செய்யப் போகிறீர்கள்?"என்று சுன் திருப்பிக் கேட்டார்.

அவப்பெட்டியைத் திறக்குமாறு அதில் இருந்த பெண்மணியின் கணவர் கேட்டுக் கொண்டார். எரு நாள் முன்னதாக அவளுக்கு இடுப்பு வலி எடுத்ததாகவும் குழந்தையைப் பிரசவிக்க முடியாம்ல அவள் உயிர் பிரிந்து விட்டதாகவும் மருத்துவரிடம் கணவர் கூறினார். அந்தப் பெண்மணியின் துடிப்பதை சுன் உணர்ந்தார். அவளது உடலில் 3 ஊசி கொண்டு துளையிட்டார். வெகு விரைவில் அவளது உடலில் அசைவு உண்டாயிற்று. அவனுக்குத் தர வேண்டிய மருந்துகளைக் கணவரிடம் கொடுத்தார். மருத்துவர் சுன் உடனடியாக அவளை வீட்டுக்கு எடுத்துப் போய் மருந்து கொடுத்தால் தாயும் குழந்தையும் நலமாக இருப்பார்கள் என்று கூறினார். அவ்வாறே செயல்பட்டான் கணவன். ஆரோக்கியமான குழந்தையை அவள் பெற்றெடுத்தாள். இந்த நிகழ்வின் காரணமாக மருத்துவர் சுன் பழஞ்சீனாவில் மிகவும் பிரமலமாகிவிட்டார்.

சீனாவில் மட்டுமல்ல உலகிலேயே அறுவை சிகிச்சைக்காக நோயாளிக்கு மயக்க மருந்து தருவதை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர் குவா துவா எனும் சீன மருத்துவர் ஆவார். ஐரோப்பாவில் இத்தகைய செயல்முறை நடைமுறைக்கு வருவதற்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் செயல்படுத்திப் பெருமை பெற்றார். இன்று சீனாவில் நல்ல டாக்டர் ஒருவரை ஹூவா துவாவின் மறு அவதாரம் என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எரு நாள் நோயாளி ஒருவர் ஹுவாவிடம் வந்தார். தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டு அவதிப்படுவதாக நோயாளி தெரிவித்தார். ஹூவா நன்கு பரிசோதித்தார். பிறகு நசுக்கிய பூண்டு அரைக் கிண்ணம் வினிகர் ஆகியவற்றை நோயாளிக்குத் தருமாறு கூறினார். அருந்தியவுடன் நோயாளி வாந்தியெடுத்தார். சிறிய புழுக்கள் வெளியே வந்து விழுந்தன. நோயாளி உடனே குணமாகிவிட்டார்.

கோபம் கொள்வதையே மருந்தாகத் தெரிவு செய்தவர் மருத்துவர் ஹுவா. சில நாட்களாக உடல் நலக் குறைவினால் சிரமப்பட்டிருந்த அதிகாரியை ஹுவா சோதித்துப் பார்த்தார். அதன் பிறகு அதிகாரியிடமிருந்து கட்டணம் வாஹ்கிக் கொண்டார். ஆனால் மருந்து எதுவும் தரவில்லை. ஒரு கடிதத்தை எழுதி அங்கு வைத்துதவிட்டு ஹுவா சென்று விட்டார். கடிதத்தைப் படித்த அதிகாரி மருத்துவர் தன்னை அவமானப்படுத்திவிட்டதாக எண்ணினார். ஹுவாவைக் கைது செய்து வருமாறு ஆட்களை அனுப்பினார். ஆனால் தோல்விகிட்டியது. இதனால் கோபமுற்ற அதிகாரி ரத்த வாந்தி எடுத்தார். அதன் பிறகு படிப்படியாக அவரது உடல் நலம் தேறிவிட்டது.

பாமர மக்கலுக்கு மருத்துவச் சேவை புரிவதைக் கொள்கையாகக் கொண்டிருந்த காரணத்தால் மருத்துவர் ஹூவாவின் வாழ்க்கை சோகத்தில் முடிவடைந்தது. (CAO CAO)சாவ் சாவ் என்பவர் கடுமையாக உடல் நலம் குன்றிப் போனார். எந்த மருத்துவராலும் அவரைக் குணப்படுத்த இயலவில்லை. ஹுவா வந்தார். பரிசோதித்தார். ஊசித் துளையீட்டு மருத்துவச் சிகிச்சை அளித்தார். சாவ் சாவ் தேறிவிட்டார். "எனது குடும்ப வைத்தியராக இருந்து விடுங்கள்"என்று ஹுவாவை வேண்டினார். ஆனால் அவர் மறுத்து விட்டார். மீண்டும் அவரை அவைத்துவரச் செய்து அதே கோரிக்கை விடுத்தார் சாவ்.. மீண்டும் ஹுவா மறுத்து விட்டார். கோபமுற்ற சாவ் மருத்துவர் ஹுவாவைக் கொன்றுவிட்டார்.

ஆயினும் சீனப் பாரம்பரிய மருத்துவம் உள்ளவரை இந்த மருத்துவர்களின் பெயர்களும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.