நீளமான கூந்தலைக் கொண்டிருப்பது என்பது, உலகெங்கும் பெரும்பாலான பெண்களின் கனவாகும். பெண்களைப் பொருத்தவரை, நீளமான கூந்தலை சீவும் போது, மனக்குரலை கூந்தலில் சேர்த்து மறைத்துவிடலாம். தென் சீனாவின் குவான்சி சுவான் இனத்தன்னாட்சி பிரதேசத்தில், நீண்ட கூந்தல் உடையதால் புகழ்பெற்ற பெண்கள் வாழ்கின்றனர். அவர்கள் கருப்பு கூந்தலில் இன்பத்தையும் லட்சியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சில பொருட்கள் உள்ளன.
இக்கிராமத்தில் வாழும் பான் சி காங் கூறியதாவது:
நீளமான கூந்தல் மிகவும் அழகானது. கூந்தல், உயிரில் ஒரு பகுதியாகும். அதை விரும்பியவாறு கைவிட முடியாது. நீளமான கூந்தல், நீண்ட உயிரையும் செல்வத்தையும் காட்டுகிறது என்று சிவப்பு YAO இனத்தின் பெண்கள் கருதுகின்றனர். கூந்தலைப் பாதுகாக்கும் பொருள் சிறப்பாக இருக்கிறது. அரிசியைச் சுத்தம் செய்யும் நீரில் சில மூலிகைகளை சேர்த்து புளிக்க வைத்து தயாரித்த ஒருவகை நீர், கூந்தலைப் பேணிகாப்பதற்கு பயன்படுத்தப்பட்டுகிறது. இப்போது, சில பெண்கள், 70 அல்லது 80 வயதாக இருந்தாலும் அவர்களின் கூந்தல் கருப்பாக உள்ளது என்றார் அவர்.
நீளமான கூந்தலை தவிர, வெள்ளி நகைகளும், துணியில் பூ வேலைப்பாடு உள்ள சட்டையும், சிவப்பு YAO இனப் பெண்களின் தனித்தன்மைகளாகும். சிவப்பு நிறச் சட்டை அணிந்த YAO இன பெண்கள், பாதையிலுள்ள அழகான காட்சியாக மாறியுள்ளனர்.
சீவிச் சிங்காரித்த கூந்தலைப் போன்றே, சிவப்பு YAO இன பெண்கள் அணியும் சட்டையும், அவர்களின் வயது ரகசியத்தை மறைத்து விட்டது. பான் சி சின் கூறியதாவது:
நாங்கள், அந்தந்த வயதுக்கு ஏற்ப சட்டை அணிகின்றோம். இளம் பெண்கள் சிவப்பு நிறமான சட்டையும், வயது முதிர்ந்த பெண்கள் கருப்பு நிறச் சட்டையும் அணிகின்றனர் என்றார் அவர்.
சிவப்பு YAO இனத்தின் பெண்கள் அனைவரும், துணியில் பூவேலை செய்வதில் திறமை சாலிகள். அவர்கள் செய்யும் பூவேலைகள் எளிமையாகவும் உயிரோட்டத்துடனும் இருக்கின்றன. இதில் கூந்தலைச் சுற்றுவதற்குப் பயன்படும் துணியிலுள்ள வேலைப்பாடு குறிப்பிடத்தக்கது. ஐந்து நிறமான நூல்களை பயன்படுத்தி சதுரம் சதுரமாக வேலை செய்யப்பட்டுள்ளது. இது, பாரம்பரிய கதையில் கூறப்பட்ட வேலை YAO மன்னரின் முத்திரையாகும்.
|