• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-22 09:05:36    
கே கே போஜனின் கருத்துகள்

cri
ரா-------நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே. கே போஜன், நமது ஏப்ரல் மே திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பற்றி கருத்து எழுதியுள்ளார். குறிப்பாக தமிழ் ஒலிபரப்புக்கு மிக அதிகமாக 3 லட்சத்து 56,000 கடிதங்கள் கடந்த ஆண்டு வந்தன என்பது சீனாவிலும் சரி, இந்தியாவிலும் சரி தமிழன் என்றுமே நம்பர் ஒன் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்கிறார். சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் நெஞ்சம் மறப்பதில்லை. என்ற கட்டுரையில் ஆன்லைன் அஞ்சலி பற்றிக் கேட்டு ஆச்சரியமடைந்தேன் என்று கூறிய போஜன். சீனாவில் மெய்ச்சிங் தமிழர் குழு நடத்திய தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முத்தாராமன் தமிழா தமிழா என்று பாடியது. பாரதியாரின் சிந்து நதிமிசை நிலவினிய என்ற பாடலை நினைவூட்டியது என்று குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மதுரை செல்லூர் நேயர் நா சீனிவாசன் ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகளை பாராட்டி எழுதியுள்ள கடிதம். 9-4-2005 அன்று சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சியில் எஸ் செல்வத்தின் கட்டுரையும், நட்பு பாலம் நிகழ்ச்சியில் சீனர்களஇன் நாநரம்புகளை இந்து பாபின் மூலம் சுண்டி இழத்த புரோட்டா மாஸ்டர் எஸ் ராமநாதனின் பேட்டியும், 7-4-2005 அன்று பெய்சிங் நூல் பொருட்காட்சி பற்றிய தொகுப்புரையில், தமிழகப் பிரதிநிதிகள் கூறிய கருத்துக்களும் நன்று என்று எழுதியுள்லார், மேலும் இந்த ஆண்டில் மதுரை மாவட்ட நேயர் மன்றம் 10 புதிய நேயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறி விட்டு, மாவட்ட அளவில் நேயர் மன்றம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது திருச்சி ரவிச்சந்திரன் இல்லத்தில் கூடி விவாதித்த சிறப்பு நிகழ்ச்சி அருமை என்கிறார். வி--------நேயர்களே. உங்களுடைய ஈடுபாட்டையும் அக்கறையையும் பாராட்டுகிறோம். எங்களுடைய வரம்புக்கு உட்பட்டு நேயர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்ய முயன்று வருகிறோம். வி-------பெரும்பலூர் மாவட்டம் தேவனூர் நேயர் பி ஜோதிலட்சுமியும் புரோட்டா மாஸ்டர் ராமநாதனின் பேட்டியைப் பாராட்டியுள்ளார். நமது ஒலிபரப்பு பற்றி பல நேயர்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். சகோதரர் பி, ஏ நாச்சிமுத்து அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது சந்தேகங்கள்ளத் தீர்த்து வைக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது. வி-------நேயர்கள் அவர்களாகவே ஒருவரோரு ஒருவர் தொடர்பு கொண்டு ஒரு குடும்பம் போல இயங்குவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் ஊக்கத்தைப் பாராட்டுகிறோம். ரா-------விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பி இளங்கோவன் மே 3 ம் நாள் செய்திகள், செய்தித் தொகுப்பு ஆகியவற்றைப் பாராட்டிவிட்டு, மலர்ச் சோலை நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் ராஜமாணிக்கம் வழங்கிய செய்திகள் ஒன்று என்கிறார். மேலும் தமிழ் மூலம் சீனம் நூலைப் படித்து விட்டு, எழுதிப் பழகுவதாக தெரிவித்துள்ளார். எழுதியும் அனுப்பியிடுக்கிறார். ஒரு முறை எழுதிப் பார்ப்பது, பத்து முறை படிப்பதற்குச் சமம் என்கிறார். வளவனூர் ஏ கண்ணன் மே திங்கள் நிகவ்ச்சிகளை பாராட்டி எழுதியுள்ளார். ராசிபுரத்தைச் சேர்ந்த நேயர் அவருடைய எண் 077502 10 பக்கங்கள் எழுதியுள்ளார். ஒரு பக்கத்தில் கூட அவருடைய பெயர் இல்லை. ஏப்ரல் திங்கள் அறிவியல் நிகழ்ச்சியில், ஐன்ஸ்டீன் பற்றிய உரையில் அறிவியல் அறிஞர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கலாம் என்று கூறியது எங்கல் இதயத்தில் சம்மட்டியால் அடித்தது போன்று இருந்தது. தமிழகத்தில் பல இடங்களில் அப்துல் கலாம் ரசிகர் மன்றம் வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தெரிவித்துவிட்டு, ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட மன நிம்மதி எனக்கு இன்று ஏற்பட்டது என்று பாராட்டியுள்ளார். வி-------நேயர்களின் பாராட்டுக்களுக்கு நன்றி. மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். கடிதத்தாளில் பெயர், முகவரி தெளிவாக எழுதுங்கள். உறையில் மட்டும் எழுதினால் போதாது.