• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-26 20:36:19    
ஊக்க மருந்து தடுப்பு பணி

cri

சீனாவில் 2005ஆம் ஆண்டு ஊக்க மருந்து தடுப்பு பற்றிய தேசிய கூட்டம் ஜூலை 14ஆம் நாள் கிழக்கு சீனாவிலுள்ள ஹொ பெய் நகரில் நிறைவடைந்தது. 2008ஆம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு விதியை மீறும் எந்த நிகழ்ச்சியும் நிகழக் கூடாது என்று இக்கூட்டத்தில் சீன ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் லியூ பொங் கேட்டுக்கொண்டார்.

ஜூலை 17ஆம் நாள் டுனீசியாவில் நடைபெற்ற 6வது உலக இளம் மகளிர் பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் சீன இளம் மகளிர் அணி 77-60 என்ற புள்ளிக்கணக்கில் கனடாவைத் தோற்கடித்து, மூன்று ஆட்டங்களிலும் வெற்றி என்ற சாதனையுடன் முதல் எட்டு வலுவான அணிகளில் சேர்ந்துள்ளது. முன்னதாக, சீன அணி அடுத்தடுத்து ஹங்கேரி அணியையும் ஸ்பெயின் அணியையும் தோற்கடித்தது.

3 வாரங்கள் நீடித்த மூன்றாவது பெய்சிங் 2008 ஒலிம்பிக் பண்பாட்டு விழா ஜூலை 16ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. இதற்கிடையில், ஒலிம்பிக் பண்பாட்டு சதுக்கம், சர்வதேச விளையாட்டு திரைப்பட விழா, ஒலிம்பிக்கை மையமாகக் கொண்ட கலை பொருள் காட்சி, ஒலிம்பிக் கருத்தரங்கு உள்ளிட்ட பல பண்பாட்டு விளையாட்டு நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த பண்பாட்டு விழாவில், மனிதன் முதன்மை, பொது மக்கள் பங்குகொள்வது என்ற சிறப்பியல்பு பிரதிபலிக்கப்பட்டது.

ஜூலை 17ஆம் நாள் ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச சுவர் பந்து மகளிர் போட்டியின் இறுதிப் போட்டியில் 2002ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாம்பிபயன் பட்டம் பெற்ற சீன ஹாங்காங் வீராங்கனை சௌ யொங் சியன் 3-1 என்ற செட் கணக்கில் நியூச்சிலாந்து வீராங்கனை ஒருவரை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

11வது உலக நீச்சல் சாம்பியன் பட்ட போட்டி ஜூலை 17ஆம் நாள் கனடாவின் மான்ட்ரியால் நகரில் துவங்கியது. முதல் நாள் நடைபெற்ற இரண்டு நீர் குதிப்பு நிகழ்ச்சிகளிலும் சீன வீரர்களும் வீராங்கனைகளும் தங்கப் பதக்கம் பெற்றனர். அவற்றில், ச்சியா தொங், யுவான் பெய் லின் ஜோடி, மகளிர் இரட்டையர் பத்து மீட்டர் மேடை நீர் குதிப்பிலும், ஹொ ச்சுங், வாங் பொங் ஜோடி ஆடவர் இரட்டையர் மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பிலும் சாம்பியன் பட்டம் பெற்றன. மொத்தம் 150க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள். சீனாவின் 71 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நீச்சல், நீர் குதிப்பு, இசை நடன நீச்சல், நீர் பந்து ஆகிய நான்கு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். அனைத்து போட்டிகளும் ஜூலை 31ஆம் நிறைவடையும்.