• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-28 20:43:04    
இலக்கு சுடும் போட்டி

cri

உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டியின் செர்பிய சுற்று ஜூலை 17ஆம் நாள் பெல்கிரேடில் துவங்கியது. மகளிர் இரட்டையர் திசைகளில் பறக்கும் தட்டு சுடும் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியிலும் மகளிர் பல திசைகளில் பறக்கும் தட்டு சுடும் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியிலும் சீன வீராங்கனைகள், இரண்டு வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றனர்.

சர்வதேச பூப்பந்து சம்மேளனம் அண்மையில் பல்வேறு தனிநபர் போட்டிகளின் உலகளாவிய புதிய தர வரிசைப் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. சீன வாராங்கனை சாங் நிங் தனது சகநாட்டவரான சியே சிங் பாங்கைத் தாண்டி, மகளிர் ஒற்றையர் போட்டி நிகழ்ச்சி பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார். ஆடவர் ஒற்றையர் போட்டி நிகழ்ச்சி பட்டியலில் சீனாவின் புகழ் பெற்ற வீரர் லின் டான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார்.

8வது ஆசிய இளைஞர் பூப்பந்து குழு சாம்பியன் பட்டப் போட்டி ஜூலை 17ஆம் நாள் இந்தோநேசியாவின் தலைநகரான ஜகர்த்தாவில் நிறைவடைந்தது. சீன அணி மகளிர் பிரிவின் சாம்பியன் பட்டத்தையும் ஆடவர் பிரிவின் இரண்டாம் இடத்தையும் பெற்றது. 5 தனிப்பட்ட போட்டிகளில் சீன வீராங்கனைகள் மகளிர் ஒற்றையர் போட்டியிலும் இரட்டையர் போட்டியிலும் தங்கப்பக்கம் தட்டிச் சென்றனர். ஆடவர் குழுப் போட்டியில் தென் கொரியா சாம்பியன் பட்டம் வென்றது.

தடகளப் போட்டி ஜூலை 16ஆம் நாள் மாட்ரிட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள சம்மேளன உச்ச நிலை பரிசு போட்டியின் கோலூன்றி உயரத் தாண்டல் போட்டியில் ரஷியாவின் புகழ் பெற்ற வீராங்கனை இசிந்பாயேவா 4.95 மீட்டர் என்ற உயரத்தைத் தாண்டி 15வது முறையாக தனது உலக சாதனையை முடியடித்தார். ஜூலை திங்கள் 5ஆம் நாள் அவர் 4.93 மீட்டர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

கால் பந்து 2005 ஆம் ஆண்டு 17 வயதுக்குள் இளைஞர் கால் பந்து உலக சாம்பியன் பட்டப் போட்டிக்காக குலுக்கு சீட்டை எடுக்கும் விழா ஜூலை 17ஆம் நாள் நடைபெற்றது. கடந்த ஆண்டு சான்பியனான சீன அணி ஏ பிரிவில் சேர்க்கப்பட்டது. இதே பிரிவில் உபசரிப்பு நாடான பெரு, கானா, கொஸ்டாரிக்கா ஆகிய அணிகளும் உள்ளன. இப்போட்டி செப்டம்பர் திங்கள் 16ஆம் நாள் முதல் அக்டோபர் 2ஆம் நாள் வரை பெருவில் நடைபெறும்.

டென்னிஸ் 2005ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை டென்னிஸ் குழுப் போட்டியின் உலகக் குழுவின் கால் இறுதிப் போட்டி ஜூலை 17ஆம் நாள் நிறைவடைந்தது. ரஷியா, ஆர்ஜேன்டினா, கிரோஷியா, ஸ்லோவாக்கியா ஆகிய அணிகள் தத்தமது எதிர் அணியைத் தோற்கடித்து நான்கு வலுவான அணிகளில் சேர்ந்துள்ளன. டெவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டி, ஆடவர் குழுவின் மிக உயர்ந்த நிலையை பிரதிபலிக்கும் போட்டியாகும்.