• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-26 10:10:36    
ஒலிம்பிக் விளையாட்டிப் போட்டியில் சமூகத்தின் பங்கு

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பயன்படும் உயர் அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய கட்டுரையின் இரண்டாவது பதுகி தொடர்கின்றது.

 

அவர் கூறியதாவது"நாங்கள் ஆராய்ந்து தயாரிக்கும் மொழி பெயர்ப்பு தொகுதி பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு நண்பர்களுக்கு சேவை புரியும். அது முக்கியமாக கையடக்கமான மின்னணுப் பொருட்களில் எடுத்துக்காட்டாக கையடக்கமான கணிணி, செல்லிட பேசி முதலிய மின்னணு பொருட்களில் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படும். ஓட்டல்களில் ஆர்டர் செய்வது,போக்குவரத்து தகவல்களை விசாரிப்பது, மருத்துவ சிகிச்சை, சாப்பிடுவது முதலிய துறைகளில் பயன்படுத்துவோருக்கு தேவைப்படக் கூடிய மொழி பெயர்ப்பு தொகுதியை வழங்கும்"என்றார் அவர்.

2008ல் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது பெருவாரியான அந்நிய விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள், பயணிகள் ஆகியோர் பெய்சிங்கிற்கு வருவார்கள். அவர்களின் கையடக்கக் கணிணி அல்லது செல்லிட பேசியில் இது பொருத்தப்பட்டால் அவர்களுக்கு ஒரு மொழிப் பெயர்ப்பாளர் கிடைத்து விடும். அவர்கள் பேசும் மொழிகள் வெகு விரைவில் சீன மொழியாக்கம் செய்யப்படும். அதனிடையில் சீனர் பேசும் சீன மொழியையும் பல அந்நிய மொழிகளில் மொழிபெயர்க்க முடியும். இது பற்றி பார்ப்போம்

2008ம் ஆண்டு மின்னணு மொழிப் பெயர்ப்பு தொகுதி பெய்சிங் வீதிகளில் நிறுவப்படும். 3000க்கும் அதிகமான தகவல் காட்சி மண்டபங்களில் பயன்படும்.

 

அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக் செயல் திட்டத்துக்கு பொறுப்பான சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரி து சுச்சைன் யுவான் இதர திட்டப் பணிகள் பற்றி எமது செய்தியாளரிடம் எடுத்துக் கூறியதாவது"மின்சாரத்தால் இயக்கப்படும் மோட்டார் வாகன திட்டப் பணியில் முக்கிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பசுமையான கட்டிட அளவுகோல் அதன் பயன்பாட்டு மாதிரி நிகழ்ச்சிகள் ஒலிம்பிக் விளையாட்டு திடல் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் விடுதிகள் கட்டுமானம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான எரியாற்றல் சிக்கனம், தண்ணீர் சிக்கன வரையறை முதலியவற்றை முன்வைத்துள்ளது. சுருங்கக் கூறின் 10 முக்கியமான நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன"என்றார் அவர்.

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் உள்ளன. இக்காலத்தில் இன்னும் பல புதிய அறிவியல் தொழில் நுட்பங்கள் தோன்றும். அவற்றை சீனா உரிய காலத்தில் பயன்படுத்தும் என்றும் அதிகாரி து சச்சைன் யுவான் குறிப்பிட்டார்.

நேயர்கள் இதுவரை 2008 பெய்சிங் ்ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பயன்படும் உயர் அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறிமுகப்படுத்தினோம். இத்துடன் இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. நன்றி வணக்கம.