• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-25 09:15:28    
டி குமாரின் கருத்துகள்

cri
திருச்சி மாவட்டம் குருவம்ப்பட்டி நேயர் டி குமார், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி தற்போது உரையாடல் போல் ஒலிபரப்பாவது நன்றாக இருக்கிறது என்கிறார் எஸ் பெரம்பலூர் மாவட்டம் உத்திர்ககுடி நேயர் சு கலைவாணன் ராதிகா நமது பல நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு எங்களாலும் சீன மொழியைப் பேச முடியும் என்ற தன்னம் பிக்கை வந்து விட்டது என்கிறார். திருச்சி மாவட்டம் அபினி மங்கலம் கே அருன் ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகலைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக பெய்ச்சிங் தமிழர்கள் கொண்டாடிய புத்தாண்டு விழா பற்றிய தொகுப்பும் சிங்மிங் எனப்படும் கல்லறை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி பற்றிய தகவலும் நன்றார இருந்தன என்கிறார். கோவை மாவட்டம் மாச்சம் மாளையம் நேயர் ஆர் சின்னராச் சி ஆர்ஐ வலைதளம் அருமையாக வடிவமைக்கப்பட்டுல்ளது. அதே போல சீன வானொலி நேயர் மன்ற வலைதளமும் மிகச் சிறப்பாக உள்ளது. மேலும், எஸ் எம் எஸ் நெட் மூலமும் நேயர்களிடையே ராஜக்கோபால் செல்வம் பாலகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தகவல்களை அளித்து வருகிறார்கள் என்று பாராட்டியுள்ளார். வி-------நேயர்களின் உற்சாகமான பங்கேருப்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். ராஜா, மின்னஞ்சல் உண்டா ரா-------மின்னஞ்சல்கள் இல்லாமல் நேயர் நேரமா. நிறையவே இருக்கின்றன. முதலில் பிகார் மாநிலம் முஸபர்பூரில் இருந்து ஒரு வானொலி ஆர்வலர் முகேஷ்க்குமார் தம்மை காஸ்மோஸ் கிள உறுப்பினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, லண்டனில் நிகழ்ந்த பயங்கரவாதச் செயல்கலைக் கண்டிந்து அஞ்சல் அனுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கே அருண் தமது மின்னஞ்சலில், திருச்சி அண்ணா நகர் விடி ரவிச்சந்திரனின் சீனப்பயண அனுபவங்கள் மூலம் சீனாவின் வேகமான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார். பாண்ட மங்கலம் எம் தியாகராஜன் தமது மின்னஞ்சல் இணைய தள நிகழ்ச்சிகளை பார்க்க கூடிய வாய்ப்பு இன்று கிடைத்தது நான் வானொலியில் கேட்பதை விட இணைய தளம் மூலமாக நிகழ்ச்சிகலை பார்க்கின்ற வாய்ப்புதான் அதிகமாக உள்ளது. இணைய தளம் மூலமாக நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது, காதுக்கு மட்டுமின்றி, கண்களுக்கும் விருந்து அளிக்கின்ற வகையில் உள்ளது. இணையதள் நிகழ்ச்சிகலை தயாரிக்கும் என்று கூறுகிறார், மேலும் இணைய தளத்தின் தனிச்சிறப்பு, சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் பாப்பாளியில் அடங்கி ஊள்ள சத்து ஆப்பில் பத்தில் ஊள்ள சத்தினை விட அதிகம் என்பதை அறிந்து வியந்தேன். இனி எங்கள் உணவு வகையில் கண்டிப்பாக பாப்பாளிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். கருப்படி கே பிரபாகரன் தம்முடைய மின்னஞ்சலில், விளையாட்டுச் செய்திகளைத் தொகுத்து வழங்கும் தமிழ்ச் செல்வம் அவர்களைப் பாராட்டியுள்ளார். மேலும், நிறைய கிரிக்கெட் செய்தி அறிக்கையில் சில விளையாட்டுச் செய்திகளும் இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். வி------நேயர்கள் மின்னஞ்சல் மூலமாக உடனுக்குடன் நிகழ்ச்சிகள் பற்றி கருத்துத் தெரிவிப்பதை பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். சுடச்சுட சாப்பிடும் உணவின் ருசியே தனி அல்லவா , நேயர் பிரபாகரன் விளையாட்டுச் செய்திகள் பற்றிக் கூறிய கருத்துக்களைக் கவனத்தில் கொள்கிறோம்.