• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-26 09:34:57    
மின்னஞ்சல்

cri
அடுத்த படியாக, வளவனூர் புதுப்பாளையம் நேயர் எஸ் செல்வம் அனுப்பியுள்ள மின்னஞ்சல்கள் அனைத்து மொழிப்பிரிவுகளுடன் தமிழ்பிரிவும் இணைய தளத்துளையில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து சூன் திங்கள் 28 முதல் ஜீலைத் திங்கல் 16ம் நாள் வரை ஒலிபரப்பான நிகழ்ச்சிகள் பற்றி தினமும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அவற்றில் சில முக்கியமான பகுதிகளைப் படிக்கட்டுமா வி-----படியுங்கள் ரா-----சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சிய்ல இடம்பெற்ற ஊர் இ மலை என்ற கட்டுரை என்னைப் பெரிதும் கவர்ந்தது. மலர்ச் சோலை நிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறுசிறு துணுக்குகள் மிகவும் நன்றாக இருந்தன என்று வளவனூர் எஸ் செல்வம். சூலை திங்கள் 7ம் நாள் ஒலிபரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சியும் நன்றாக இருந்தது. கடல் நீர் சூடாகி வருவது வருவது பற்றிய தகவல் சுவையாக இருந்தன. கடல் நீர் சூடாகி வருவது பற்றிய தகவல் சுவையாக இருந்தன. கடல் நீர் சூடானால் ஏற்படும் பின்விளைவுகளை கற்பனை செய்து பார்த்தாலே மிகவும் பயங்கரமாக இருக்கிறது. சூலாத் திங்கள் 8ம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளை சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான அமெரிக்காவில் சீன அதிகாரிகள் என்ற கட்டுரை மூலம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அரசு விவகாரங்களில் சீனர்கள் பெற்ற சாதனைகலை முழுவதுமாக அறிந்து கொள்ள முடிந்தது. உண்மையில் இது தான் சீனாவுக்கு அப்பால் நிகழ்ச்சி நட்பு பாலம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற தலைமுடி பதனீட்டுத் துறையில் ஈடுபடும் பெஞ்சமின் செரியன் அவர்கலின் நேர்காணல் நிகழ்ச்சியும் நன்றாக இருந்தது. சூலை திங்கள் 12ம் நாள் இடம் பெற்ற நிகழ்ச்சிகளில் இன்றைய சீனப்பண்பாடு நிகழ்ச்சியும் நன்றார் இருந்தது. ஆவித்திருடர்கள்-ஜாக்கிரதை என்ற தலைப்பே நன்றாக இருந்தது. அக்காலத்தில் சீனாவில் ஆவியை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு சில சீனர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சுவையான முறையில் திரு ராஜாராம் அவர்கள் விளக்கிக் கூறினார். சூலை திங்கள் 16ம் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இசை நிகழ்ச்சியில் மேற்குப் பகுதி நாட்டுப்புறப் பாடல்களை படைத்த வான்கோபின் அவர்களின் சிறந்த பாடல்களை தொடர்ந்து மீனா வழங்கினார். மீனாவுக்கு ஒரு வேண்டுகோள், அவருடைய குறிப்புரையை கூறி முடித்த பின் பாடல்களை வழங்க வேண்டும். அவர் பேசும் போதே பாடல் ஒலிக்கத் துவங்கி விடுவதால் அவர் என்ன பேசுகின்றார் என்பதைப் பரிந்து கொள்ள இயல வில்லை. எனவே கோடு போட்ட பகுதிகளை தட்டச்சு செய்யவும். நேயர் செல்வம் இவ்வாறு மின்னஞ்சல்களை அனுப்பிவிட்டு இது வரை இந்த ஆண்டில் அவர் அனுப்பிய கருத்துக் கடிதங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். வி-----நேயரின் உற்சாகத்தைப் பாராட்டுகிறோம்.