• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-27 17:10:58    
தமிழ் மூலம் சீனம் பாடம் 30

cri

வணக்கம் நேயர்களே, 听众们,你们好。(திங் துங் மன், நி மன் ஹௌ)தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் ந்தித்துள்ளோம். மிக மகிழ்ச்சி. எப்படி நலமா?நான் தமிழ்ச் செல்வம்.

அன்புடைய நேயர்களே, 大家好(தா ச்சியா ஹௌ)。அனைவருக்கும் வணக்கம். உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நான் வான்மதி.

நேயர்களே, இன்று நாம் ஏற்கனவே படித்துள்ள சில சொற்களை பயன்படுத்தி ஒரு கொஞ்சம் நீளமான உரையாடலை படிக்கின்றோம்.

您好!

早上好!

请问,您贵姓?

我姓张,您呢?

我姓王。您在哪儿工作?

我在学校工作。我是老师。您在哪儿工作。

我在电台工作,我是播音员。

您工作忙吗?

我工作很忙,您呢。

我也很忙。

您身体好吗?

我身体很好,您呢?

我也很好。谢谢您!

认识您,我很高兴。

认识您,我也很高兴。

欢迎您来我家。

谢谢您!

不客气!

再见!

再见!

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தை தருகின்றோம்.

您好!

வணக்கம்!

早上好!

காலை வணக்கம்!

请问,您贵姓?

தயவுச் செய்து, உங்கள் குடும்பப் பெயர் என்ன?

我姓张,您呢?

என் குடும்பப் பெயர் சாங், நீங்கள்?

我姓王。您在哪儿工作?

எனது குடும்பப் பெயர் வாங், நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?

我在学校工作。我是老师。您在哪儿工作。

நான் பள்ளி கூடத்தில் வேலை செய்கிறேன். நான் ஒரு ஆசிரியர், நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?

我在电台工作,我是播音员。

வானொலி நிலையத்தில் வேலை செய்கின்றேன், நான் ஒரு அறிவிப்பாளர்.

您工作忙吗?

உங்கள் வேலை அதிகமா?

我工作很忙,您呢。

அதிகம் தான், நீங்கள்?

我也很忙。

எனக்கும் வேலை அதிகம்.

您身体好吗?

உங்கள் உடல் எப்படி?

我身体很好,您呢?

உடல் நலம் தான், நீங்கள்?

我也很好。谢谢您!

நானும் நலமாக இருக்கிறேன், நன்றி!

认识您,我很高兴。

உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

认识您,我也很高兴。

நானும் மகிழ்ச்சி.

欢迎您来我家。

என் வீட்டுக்கு வருவதை வரவேற்கின்றோம்.

谢谢您!

நன்றி!

不客气!

பரவாயில்லை.

再见!

வணக்கம்!

再见!

வணக்கம்!

இந்த உரையாடலின் தோன்றிய இரண்டு புதிய சொற்களின் தமிழாக்கம் வருமாறு. 电台 என்றால் வானொலி நிலையம் என்பது பொருள். 播音员 என்றால், அறிவிப்பாளர், அல்லது வாசிப்பவர் என்பது பொருள். ஏனைய சொற்கள் எல்லாம் நாம் ஏற்கனவே படித்திருக்கின்றோம்.