• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-28 14:35:19    
எந்திர மனிதனின் தந்தை

cri
ஐன்ஸ்டீன் போல தொங்குமீசை அப்துல் கலாம் போல தோளைத் தொடும் நீண்ட தலைமுடி இப்படித்தானே ஒரு விஞ்ஞானி இருக்க வேண்டும். ஆனால் இந்த விஞ்ஞானி வித்தியாசமானவர். அதாவது சாதாரண மக்களைப் போல மக்களோடு மக்களாக நடமாடும் ஒரு விவசாயி.

பெய்சிங் நகருக்கு தென்கிழக்கே சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள மாவு கிராமத்தில் வசிக்கும் 43 வயது விவசாயி வூ யு லூ தான் அந்த வித்தியாசமான விஞ்ஞானி. இவர் இதுவரை 15 எந்திரக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கின்றார். அதாவது ரோபோட் எனப்படும் 15 எந்திர மனிதர்களை உருவாக்கியிருக்கிறார். இவரை எந்திர மனிதனின் தந்தை என்று அழைப்பது மிகவும் பொருந்தும். இவர் தனது எந்திரமனிதனுக்கு வூ லோ தா என்று பெயரிட்டார். சீன மொழியில் லோ தா என்றால் தலைச்சன் குழந்தை என்று பொருள் தொடர்ந்து கண்டுபிடித்த எந்திரக் குழந்தைகளுக்கு வூ லோ எர், வூ லோ சன் என்று எண்ணிக்கையின் அடிப்படையில் பெயரிட்டார். சீன மொழியில் அர் என்றால் இரண்டு சன் என்றால் மூன்று கடைசியாக இவர் உருவாக்கிய 15வது எந்திரக் குழந்தையின் பெயர் வூ சி வு. இவருடைய பண்ணை வீட்டிற்குப் போனால் ஒரு எந்திரக் குரங்கு சுவர் ஏறிக்குதிக்கின்றது. ஒரு எந்திர மனிதன் வீட்டைச் சுற்றி நடந்து வருகிறான். அவன் நடப்பது மட்டுமல்ல குதிக்கிறான் மின் விளக்கு பல்ப் தீய்ந்து போனால் வேறு பல்ப் மாட்டுகின்றான், சிகரட் பற்றவைக்க நீங்கள் தீப்பெட்டி தேடினால் உடனே சிகரட் பற்றவைத்துத் தருகின்றான். விருந்தினர்களுக்குத் தேனீர் ஊற்றிப் பரிமாறுகிறான். இன்னொரு எந்திரம் இருக்கின்றது. எட்டுக் கால்களை உடைய ஒரு மரவாகனம். அதில் நீங்கள் ஏறினால் ஒரு சிலந்தி போல சவாரி செய்யலாம்.

இவ்வளவு அற்புதமான கண்டுபிடிப்புக்களை செய்திருக்கும் வூ யு லூ என்ன படித்திருக்கின்றார். நம்ம ஊர் எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் மாதிரி இவர் மழைக்குக் கூட பள்ளிக் கூத்திற்குப் பக்கம் ஒதுங்கியதில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றார். படிப்பதற்கு எனக்குப் பிடிக்கவில்லை. நான் பள்ளிக்குப் போக விரும்பவில்லை. என் தந்தை பிரம்பால் விளாசித் தள்ளினார். அப்படியும் நான் பள்ளிக்குப் போகவில்லை என்கிறார். ஆனால் பல குழந்தைகளைப் போல பொம்மையோடு விளையாடுவது இவருக்கு குழந்தைப் பருவத்தில் பிரிய மானதாக இருந்தது. விளையாட்டை விட்டால் கிராமத்துக் குழந்தைகளுக்கு ஒரே பொழுது போக்கு கஷ்டமான வயல் வேலை தான். வூ யு லூ தமது பொழுது போக்கான பொம்மை விளையாட்டில் இருந்து தமது கற்பனைத் திறனை வளர்த்துக் கொண்டார்.

இவர் முதன் முதலில் கண்டுபிடித்தது ஒரு சிறு எந்திரம். எலாஸ்ட்டிக் நூல் கட்டிய ஒரு வட்டுடன் மரத்தின் விழுதுகளை இணைத்து இந்த எந்திரத்தை தயாரித்தபோது இவருடைய வயது ஆறு. அந்த எந்திரத்தை முடுக்கிவிட்டால் அது எலாஸ்டிக் நூலின் சக்தியால் வட்ட வட்டமாகச் சுற்றிவரும் முதுகெலும்பை ஒடிக்கும் கடினமான வயல்வேலை வூ யு லூவின் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டது. வயல் வேலையைச் செய்வதற்காக ஒரு எந்திரத்தை ஏன் உருவாக்கக் கூடாத என்று நினைத்தார்.