• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-28 14:35:19    
மூன்று சக்திகள்கள் என்ன பொருள்

cri
ஜுலை திங்கள் துவக்கத்தில் சீன அரசு தலைவர் ஹுச்சின்தாவ் கஸாகிஸ்தானில் பயணம் மேற்கொண்ட போது உரைநிகழ்த்துகையில் மூன்று சக்திகளுக்கு பதிலடி தருவது அமைதியான நிதானமான சூழலை உருவாக்குவதற்கு துணை புரியும் என்று அவர் குறிப்பிட்டார். மூன்று சக்திகள் என்றால் என்ன? இது பற்றி விளக்கம் சொல்லுங்கள் என்று சீனாவின் சியெச்சியான் மாநிலத்தின் நேயர் சான் குவெய் பூஃ கேட்கின்றார்.

இது தொடர்புடைய ஆவணங்களைப் பார்த்த பின் இப்போது அவருக்கு பதிலளிக்கின்றார் தி. கலையரசி.

2001ம் ஆண்டு ஜுன் திங்கள் 15ம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம் நடத்திய போது 《பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு பதிலடி தரும் ஷாங்காய் ஒப்பந்தம்》உருவாக்கப்பட்டது. பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று சக்திகள் பற்றி அப்போது தான் சர்வதேச ரீதியில் முதல் முறையாக தெளிவான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் இவற்றுக்கு பதிலடி கொடுக்கும் உருப்படியான திசை, வடிவம் மற்றும் கோட்பாடு முன்வைக்கப்பட்டன. வன்முறையில் இறங்கும் பயங்கரவாத சக்தி, தேசிய பிரிவினை சக்தி, மத தீவிரவாத சக்தி ஆகியவை தான் ஹுசின்தாவ் குறிப்பிட்ட "மூன்று சக்திகளாகும்".

வன்முறைப் பயங்கரவாத சக்தி 20ம் நூற்றாண்டின் 60ம் ஆண்டுகளின் இறுதியில் உருவாயிற்று. வன் முறை அல்லது நாசகரமாந வழிமுறை மூலம் பயங்கரவாதத்தை உருவாக்குவதை இது குறிக்கின்றது. வன்முறை நிகழ்ச்சிகள் மூலம் தனது அரசியல் நோக்கத்தை அடைய முயலும் குழு அல்லது அமைப்பு வன்முறை பயங்கரவாத சக்தியாகும். கடந்த நூற்றாண்டின் 80ம் ஆண்டுகளுக்கு பின் வன்முறை பயங்கரவாத கச்திகள் மேலும் சுறுசுறுப்பாக செயல்பட்டன. எடுத்துக்காட்டாக ஒஸாமா பின்லாதேன் என்பவர் உலகில் அல் கயிதா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரானார்.

பிரிவினை சக்தி 20ம் நூற்றாண்டின் மூன்றாவது தேசிய வாத வளர்ச்சியாக உருவெடுத்தது. இறையாண்மை பெற்ற நாடுகளை பிளவுபடுத்தும் அல்லது உலக அரசியல் தட்டமைப்பில் இருந்து பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்பை பிரிவினை சக்தி எனப்படுகின்றது. தேசிய பிரிவினை சக்திகள் சமூக வளர்ச்சியையும் மனித குலத்தின் முன்னேற்றத்தையும் தடுக்கக் கூடிய அரசியல் சக்தியாகும். எடுத்துக்காட்டாக ரஷியாவின் செச்சன்யோ பகுதியில் இயங்கும் சட்டவிரோதமான ஆயுத கிளர்ச்சி படை இத்தரைய ஒரு பிரிவினை சக்தியாகும்.

மத தீவிர சக்தி என்பது மதப்பாதுகாப்பு என்ற பெயரில் தீவிரவாத சிந்தனையையும் கருத்தையும் பிரச்சாரம் செய்து பயங்கரவாதத்தில் அல்லது பிரிவினை நடவடிக்கையில் ஈடுபடும் சமூக அரசியல் சக்தியாகும். எடுத்துக்காட்டாக உஸ்பெக்கிஸ்தானின் இஸ்லாமிய இயக்கம் இந்த மத தீவிர சக்தியாக கருதப்படுகின்றது.