இன்று, மிளகாய் கோழி இறக்கை எனும் தின்பண்டம் தயாரிக்க வேண்டும்.
இந்த திண்பண்டத்தைத் தயாரிக்க அதிகம் பொருட்கள் தேவை. கோழியின் இறக்கை 8, பச்சை மிளகாய் 3, இஞ்சி, 20 கிராம், வெள்ளைப்பூண்டு, 20 கிராம், எண்ணெய் 100 கிராம், கொஞ்சம் உப்பு, சர்க்கரை, மிளகு ஆகியவை எடுத்துவையுங்கள்.
இதன் தயாரிப்பு முறை.
முதலில், கோழி இறக்கைகறியையும், பச்சை மிளகாயையும் நன்றாக சுத்தம் செய்து, துண்டுகளாக அரியுங்கள். கோழி இறக்கைகறியை தட்டில் வைத்து, மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். அப்புறம், வாணலியை அடுப்பின் மீது வைத்து, கொஞ்சம் எண்ணெயை ஊற்ற வேண்டும்.
கோழி இறக்கைகறியை வாணலி எண்ணெயில் போடலாம். மிதமான சூட்டில் சுமார் 3 நிமிடங்கள் கோழி இறக்கைகறியைக் கிளற வேண்டும். கோழி இறக்கைகறியின் நிறம் மாறும் பொழுது, உப்பு, சர்க்கரை, மிளகு ஆகியவை சேர்த்து, நன்றாக வேகவிட வேண்டும்.
சுமார் 5 நிமிடங்களுக்கு பின், கோழி இறக்கைகறி நன்றாக வெந்து வரும் போது, பச்சை மிளகாயை போட்டு, நன்றாக கிளறி விட வேண்டும்.
பச்சை மிளகாய் மிருதுவாக மாறும் போது, இந்த உணவு தயார்.
இந்த உணவின் தயாரிப்பு முறையை கேட்கும் போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. சமைக்கத் தொடங்கியதும் எளிதாகி விட்டது.
இந்த உணவு, கடந்த முறை அறிமுகப்படுத்திய மிளகாய் அவரைக்காயை போன்று, காரசாரமான தொடுகறி என்று சொல்லலாம், சரியா. இந்த தொடுகறியை சோற்றுடன் பிசைந்து தின்பதும், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்வது ருசியாக இருக்குமென நம்புகின்றேன்.
|