மேற்கு சீனாவின் இதர பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது, அடிப்படை வசதிகள், கல்வி, அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் Shan Xi மாநிலம் தெளிவாக முன்னேறியுள்ளது. மேற்கு பகுதியில், Shan Xi மாநிலத்தின் உயர் கல்வி நிலையங்களும் அறிவியல் ஆய்வு நிறுவனங்களும் அதிகம். Shan Xi மாநிலத்து புதிய உயர் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு இவை சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், பல பத்து புதிய உயர் தொழில் நுட்ப தொழில் வளர்ச்சி மண்டலங்களும், அறிவியல் தொழில் நுட்ப பூங்காக்களும் இம்மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, இம்மண்டலங்களின் ஆண்டு உற்பத்தி மதிப்பு, இம்மாநிலத்தின் மொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காடாகும். இம்மண்டலங்களில், Shan Xi மாநிலத்தின் தலைநகர் Xi Anயில் அமைந்துள்ள புதிய உயர் தொழில் நுட்ப தொழில் வளர்ச்சி மண்டலம் மிகவும் குறிப்பிடத்தக்கது. 15 ஆண்டுகளுக்கு முன், இது நிறுவப்பட்டது. 10க்கு அதிகமான ஆண்டுகளில் காணப்பட்ட வளர்ச்சி மூலம், மின்னணு தகவல், மென் பொருள், உயிரின மருந்து தயாரிப்பு உள்ளிட்ட சில ஆதாரத் தொழில்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கு அதிகமான தொழில் நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு இம்மண்டலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 2 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. Da Tang தொலைத்தகவல் தொடர்பு அறிவியல் தொழில் பங்கு முதலீட்டு நிறுவனம், சீனாவில் மிக பெரிய தொலைத்தகவல் தொடர்பு வசதி தயாரிப்பு தொழில் நிறுவனமாகவும் சேவை தொழில் நிறுவனமாகவும் விளங்கியுள்ளது. இது நிறுவப்பட்ட கடந்த 7 ஆண்டுகளில், இதன் முக்கிய ஆய்வு மற்றும் வளர்ச்சி தளம் Xi An புதிய உயர் தொழில் நுட்ப மண்டலத்தில் இருக்கின்றது.
இந்நிறுவனத்தின் கிளையான Xi An Da Tang telecommunications நிறுவனத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த நிர்வாகப் பிரிவு பொறுப்பாளர் Wu Jie கூறியதாவது: "Xi An மாநகரில் உயர் கல்வி நிலையங்கள் பல உள்ளன. திறமைசாலிகள் அதிகம். தகவல் தொழில் அமைச்சின் செய்தித்தொடர்பு மைய இணையத்தின் முக்கிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. இதனால், பெரும் தொழில் நுட்ப ஆதரவு இங்குள்ள கூட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும்." என்றார் அவர். கடந்த 5 ஆண்டுகளில், மேற்கு பகுதிக்கான பெரும் வளர்ச்சி நெடுநோக்கு திட்டம் தந்துள்ள வாய்ப்பை Shan Xi மாநிலம் இறுகப்பற்றி, உள்ளூர் வள மேம்பாட்டை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை வளர்ப்பதால், இம்மாநிலத்தின் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு, இதன் மொத்த பொருளாதார மதிப்பு 29 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. பொருளாதார ஆற்றல் தெள்ளத்தெளிவாக வலுப்பட்டுள்ளது.
|