• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-29 12:24:03    
நேயர் நேரம் நிகழ்ச்சி

cri
வி-------வணக்கம், நயரேகளே. இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் நி ஹாங் கூறி வரவேற்பது விஜயலட்சுமி, ராஜா..... ரா------தாஜா ஹாங்............நேயர்களே. உங்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சி உங்களுக்கு விருப்பமான நேரம் உங்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் விருப்பமான நேரம் நேயர் நேரம் வரவேற்கிறோம். முதல் கடிதம் வளவனூர் கே சிவக்குமார் சீன வானொலியில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து விடலாமே என்கிறார். வி-------யெயோ, கஷ்டம். என்ன காரணம் ரா--------சில காலமாக சீன வானொலியில் பல நிகழ்ச்சிகளில் நேயர்களின் குரல் தான் அதிகம் ஒலிக்கிறது. பல நிகழ்ச்சிகலை நேயர்கெலே தயாரித்து அனுப்புகின்றனர். இது சரியா, தவறா என்பதை மூத்த நேயர்கள் தான் கூற வேண்டும் என்கிறார் வளவனூர் சிவக்குமார். வி-------ஒலிபரப்பில் நேயர்களின் குரல் ஒலிப்பதால், அவர்களுடைய ஈடுபாடும் இது எங்க வானொலி என்ற உடமை உணர்வும் அதிகரிக்கிறது. ஆகவே, நேயர்கள் தரமான நிகழ்ச்சிகளைத் தயாரித்து அனுப்புவதில் தவறில்லை என்றே கருதுகிறோம். ரா--------திறமை எங்கிருந்தாலும் வரவேற்கத்தக்கது. அப்படித்தானே. சரி அடுத்த கடிதம், 30 பள்ளிப்பட்டி நேயர் பி ஆர் சுப்பிரமணியன் எழுதியது. மே திங்கள் 4ம் நாள் வாணி ஒலிபரப்பிய சீனாவில் நாட்டுப்புறக் கலையின் பாதுகாப்பு என்ற செய்தித் தொகுப்பைப் பாராட்டிவிட்டு, தாம் 11 புதிய நேயர்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறுகிறார். வி----------நேயரின் உற்சாகத்தைப் பாராட்டுகிறோம். அருடைய வேண்டுகோளைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம். ரா-------பெரிய காலாப்பட்டு நேயர் பி சந்திர சேகரன், கேள்வியும் பதிலும், நட்புப் பாலம் இரண்டு நிகழ்ச்சிகளுமே இப்போது கலகலப்பாக உள்ளன. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நேயர் மன்றங்களின் வளர்ச்சி பற்றி உரையாடுகிறீர்கள். நட்புப் பாலத்தில் அன்பையும், அக்கறையையும் காட்டுகிறீர்கல் என்று கூறி கலையரசியைப் பாராட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் கொங்கம் பாளையம் நேயர் கொ செ கணேசன், தமிழ்ப புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். ஆரணி நேயர் மன்றம் தயாரித்த சிறப்பு நிகழ்ச்சியில் மலர்க்கொடி சுகுமாரன், தென்கச்சி கோ சுவாமி நாதன் போன்ற ஒலிபரப்பாளர்களின் உரை பாராட்டத்தக்கது என்று எழுதியுள்ளார். ஈரோடு மாவட்டம் அணைத் தோட்டம் நேயர் பி சதீஷ், நதது ஏப்ரல் திங்கள் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, சீனப் பண்பாடு நிகழ்ச்சியில், நீத்தார் நினைவு பற்றிய உரையில் சீனாவில் கினி, மைனை, நாய் பூனை மோன்ற செல்லம் பிராணிகளுக்கும் இருகாடு உள்ளது என்ற செய்தி வியட்மளித்தது என்கிறார், நலவாழ்வுப் பாதுகாப்பில் துனசி பற்றஇ நாமக்கல் மாவட்டம் இளங்கோவன் நல்ல பல தகவல்கள் தந்ததாகப் பாராட்டியுள்ளார். வி----------நேயர்களின் பாராட்டுக்கு நன்றி.