• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-02 06:35:00    
உலக விளையாட்டுப் போட்டிகள்

cri

ஜூலை 24ஆம் நாள் இங்கிலாந்து MANCHESTER UNITED அணி ஹாங்காங்கிலிருந்து பெய்சிங் வந்ததுள்ளது அது பெய்சிங்கில் முக்கியமாக பயிற்சி செய்கின்றது. அதற்கு அரை நாள் வணிக நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. 26ஆம் நாள் இரவு பெய்சிங் தொழிலாளர் விளையாட்டு அரங்கத்தில் இந்த அணிக்கும் பெய்சிங் நவீன அணிக்குமிடையில் ஒரு நட்புறவு போட்டி நடைபெற்றது.

கூடைப்பந்து முதலாவது ஸ்டான்கோவிச் சர்வதேச கூடைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி ஜூலை 26ஆம் நாள் பெய்சிங் தலைநகர் விளையாட்டு அரங்கத்தில் துவங்கியது. பல்வேறு கண்டங்களின் சாம்பியன் பட்ட அணிகள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன. அவற்றில் லிதுவானியா, ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, போர்ட்டோ, அங்கோலா, சீனா ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. சர்வதேச கூடைப்பந்து சம்மேளனத்தின் விதிக்கு இணங்க, ஒவ்வொரு ஆட்டமும் நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பகுதியும் பத்து நிமிடம் விளையாட்டு. சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ஒரு லட்சம் டாலர் பரிசு தொகை கிடைக்கும்.

கால்பந்து ஸ்பெயின் ராயல் மாட்ரீட் கால்பந்து அணி ஜூலை திங்கள் 24ஆம் நாள் பெய்சிங்கிலிருந்து ஜப்பானின் டோக்கியோ நகரம் சென்றது. இது இந்த அணியின் ஆசிய பயணத்தின் இரண்டாம் இடமாகும். 23ஆம் நாள் இரவு, பெய்சிங் நவீன அணியுடன் நடத்திய ஒரு நட்புறவு போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ராயல் மாட்ரீட் அணி வெற்றி பெற்றது.

சைகிள் ஓட்டப் போட்டி ச்சிங் ஹை ஏரிக் கரை 4வது சர்வதேச நெடுஞ்சாலை சைகிள் ஓட்டப் போட்டி ஜூலை 25ஆம் நாள் சீனாவின் ச்சிங் ஹை மாநிலத்தின் தலைநகரான சினிங் நகரில் நிறைவடைந்தது. 9 நாள் 9 கட்ட போட்டிகள் மூலம், செக் நாட்டின் ZVVZ அணியைச் சேர்ந்த மார்தின்.மாரிஸ் பொது சாம்பியன் பட்டம் பெற்றார். தற்போது இந்த போட்டி, ஆசியாவில் மிக உயர் நிலையிலான சர்வதேச நெடுஞ்சாலை சைகிள் ஓட்டப் போட்டியாக விளஙகுகின்றது. உலகின் 20 அணிகளைச் சேர்ந்து 100க்கும் அதிகமான வீரர்கள் இந்த ஆண்டின் போட்டியில் கலந்துகொண்டனர்.

நீச்சல் 2005ஆம் ஆண்டு உலக நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி ஜூலை 25ஆம் நாள் நிறைவடைந்தது. கடைசி நாள் நடைபெற்ற மகளிர் இரட்டையர் மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பில் சீன வீராங்கனைகளான கோ சிங் சிங், லீ திங் ஜோடி 349.80 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் பத்து மீட்டர் மேடை நீர் குதிப்பில் சீன வீரர்களான ஹூ ஜியா, யாங் சிங் ஹுய் ஜோடி இரண்டாம் இடம் பெற்றது. இந்த சாம்பியன் பட்ட போட்டியில் 10 நிகழ்ச்சிகளில் சீன அணி 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றது.