• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-04 06:51:45    
7வது உலக விளையாட்டுப் போட்டிகள்

cri

ஜூலை திங்கள் 24ஆம் நாள் ஜெர்மனியில் நிறைவடைந்தது. சீன உடல் அழகு பயிற்சி அணி, 6 பேர் கொண்ட குழு போட்டியில் தங்க பதக்கம் பெற்றது. இந்த விளையாட்டின் உலக போட்டியில் சீன அணி சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.   பில்லியர்ட்ஸ் (SNOOKER )போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீன வீரர் திங் சுன்ஹுய் ஒரு வட அயர்லாந்து வீரரிடம் தோல்வி கண்டு இரண்டாம் இடம் பெற்றார். இந்த உலக விளையாட்டுப் போட்டிகளில் சீன அணி மொத்தம் 4 தங்கம் மற்றும் 5 வெள்ளி பதக்கங்களை பெற்றது.

92வது LE TOUR DE FRANCE சைகிள் ஓட்டப் போட்டி ஜூலை 24ஆம் நாள் பாரிஸில் நிறைவடைந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற வீரர் லான்ஸ். ஆம்ஸ்ட்ராங் ஒட்டுமொத்த சாதனை பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார். அவர் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெறுவது இது 7வது முறை.

வாலிபால் ஜூலை 24ஆம் நாள் நடைபெற்று 20வயதுக்குட்பட்ட உலக இளம் மகளிர் வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டியின் ஏ பிரிவு போட்டியில் சீன அணி 3-2 என்ற செட் கணக்கில் டொமினிக்கா அணியைத் தோற்கடித்து இரண்டாம் வெற்றி பெற்றது. முன்னதாக சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் எகிப்து அணியைத் தோற்கடித்தது. துருக்கியின் அங்காரா நகரில் நடக்கும் இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்துகொள்கின்றன.

ஜூலை 22ஆம் நாள் லண்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் தடகளப் பரிசு போட்டியில் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ரஷியாவின் புகழ்பெற்ற கோலூன்றி உயரம் தாண்டல் வீராங்கனை இசிந்போவா 5 மீட்டரைத் தாண்டி சாம்பியன் பட்டம் பெற்றார். உலக வரலாற்றில் 5 மீட்டர் உயரத்தை தாண்டிய முதல்வர் இவராவார். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் 17வது முறையாக தமது மந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.

இதே நாள் மகௌ நகரில் நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட உலக மகளிர் வாலிபால் 9வது சாம்பியன் பட்டப் போட்டியின் பீ பிரிவின் இரண்டாம் சுற்றில் சீன அணி 3-2 என்ற செட் கணக்கில் உக்ரைன் அணியைத் தோற்கடித்தது. இந்த பிரிவின் மற்றொரு போட்டியில் தென் கொரிய அணி 3-0 என்ற செட் கணக்கில் ஆஸ்திரிய அணியைத் தோற்கடித்து இரண்டாம் வெற்றி பெற்று பிரிவில் முதலிடம் வகிக்கின்றது. சீன அணி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.