திபெத்தில் கனிமப் பொருள் அகழ்வாராய்ச்சியில் சமீப காலத்தில் முக்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. திபெத்திலுள்ள செம்பு கனிம படிவுகள், 2 கோடி டன் அளவு இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது, நாடு முழுவதும் உள்ள செம்பு வளத்தில் மூன்றில் ஒரு பகுதியாகும் என்று சீன புவிநிலை கள ஆய்வு பணியகத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திபெத்தின் யலுஜம்பு ஆறு உள்ளிட்ட, மூன்று பெரிய கனிமப் பொருள் மண்டலங்களில் பெரிய அளவிலான 16 கனிம வளப் படுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஐந்தாண்டுகளில், திபெத்தில், கனிமவள அகழ்வு முக்கிய தொழிலாக வளர்க்கப்படும். இதன் மூலம், பொருளாதாரத்தின் புதிய வளர்ச்சித் துறை உருவாகும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசின் துணை தலைவர் நிமா சிரென் தெரிவித்தார்.
|