• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-01 11:45:08    
சீனத் தமிழ் ஒலிபரப்பு ஆண்டு நிறைவு

cri

இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு தொடங்கியதன் 42வது ஆண்டு நிறைவாகும். இதைக் கொண்டாடும் வகையில், பெய்ஜிங் பன்னாட்டுத் தமிழர் குழு, ஜுலை 31ஆம் நாள், பெய்ஜிங்கிலுள்ள India Kitchen உணவகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பாளர்களோடு, சீனாவிலுள்ள இந்திய தூதரகத்தின் ராணுவ அதிகாரி நரசிம்மன், முதலாவது செயலாளர் ஸ்ரீதரன் உள்ளிட்ட 30க்கு அதிகமானோர் கலந்து கொண்டனர்.

துவக்கத்தில் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் சிறப்புகளை நிபுணர் ராஜாராம் விளக்கிப் பேசினார். உரை நிகழ்த்திய தமிழ் பிரிவின் தலைவர் கலையரசி, கடந்த சில ஆண்டுகளில் தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சியை விருந்தினருக்கு விபரமாக எடுத்துக் கூறினார். தூதரக அதிகாரிகள் நரசிம்மனும் ஸ்ரீதரனும் வாழ்த்து தெரிவித்து உரை நிகழ்த்தினார்கள். மலேசியாவைச் சேர்ந்த விரேனிகா, இலங்கையில் இருந்து வந்துள்ள பேராசிரியர் சந்திர சேகரம், சிங்கப்பூரில் இருக்கும் சீன வானொலி முதல் தமிழ் அறிவிப்பாளர் சாரதா அம்மையாரின் மகன் அபிலாஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். சென்னையைச் சேர்ந்த ரகுபதி பல குரல் நிகழ்ச்சி நடத்தினார்.

3 மணி நேரத்திற்கு மேல் இந்த நிகழ்த்தி நடந்தது. முடிவில் இந்தியன் கிச்சன் உணவகத்தில் விருந்து அளிக்கப்பட்டது.