• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-01 10:31:08    
ஆசை

cri
வி-------வணக்கம் நேயர்களே. தாஜாஹாங். உங்கள் அனைவரையும் இன்றைய நேயர் நேரத்திற்கு வரவேர்கிறோம் ரா------வந்து விட்டோம். நேயர்களின் நெஞ்சத்து ஆசைகளையும், எதிர்பார்ப்புக்களையும், மனக்கு முறல்களையும் ஏந்தி வந்துள்ள கடிதங்களுடைன் வந்து விட்டோம். வாசிக்கலாமா, மெய்மெய்....... வி------தாராளமாக................ ரா------முதல் கடிதம் ஒரு ஆசைக் கடிதம். சீன மொழி கற்க ஆசை. ஆஞ்சல் வழியில் கற்றுத்தரப்படுகிறதா என்று கேட்கிறார். திருச்சி மாவட்டம் அபினி மங்கலம் நேயர் கா அருன். வி-------சீன மொழியில் எழுத்து உச்சரிப்பு தொனியில் 4 வேறுபாடுகள் உள்ளன. எனவே அஞ்சல் மூலம் கற்பது சிரமம். சென்னைப் பல்கலைக் கழகத்தில் சீன மொழிக் கல்வி தொடங்கியிருப்பதாக அறிகிறோம். அங்கு தொடர்பு கொண்டு விசாரிக்கலாம். சீனாவில் இருந்து அஞ்சல் கஸம், சீனாவில் இருந்து அஞ்சல் மூலம் சீன மொழி கற்பிக்கப்படுவது இல்லை. ரா-------அபினிமங்கலம் க அருன் மே மற்றும் ஜுன் திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகள் பற்றி கருத்துக்களை எழுதியுல்ளார். கேள்வியும் பதிலும் நேருக்கு நேர் நிகழ்ச்சிகளை மேம்படுத்துங்கல் என்று யோசனை கூறிவிட்டு, நேயர் நேரம் நிகழ்ச்சி சிறப்பாக வழங்கப்படுகிறது என்று பறாட்டியுள்ளார். புதிய நேயர்களின் கடிதங்களும் இடம் பெற வேண்டும் என்கிறார். அப்புறம் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் இணையதளத்தின் வடிவமைப்பு சீராக்கப்பட வேண்டும். இப்போது உலக நாடுகளில் மரவியுள்ள தமிழர்கள் இணையதளம் மூலம் சீன வானொலியைக் கேட்பது மகிழ்ச்சி தருகிறது என்று குறிப்பிட்டுல்ளார். அடிக்கடி அறிவியல் உலகத்தலும் நலவாழ்வுப்பாது காப்பாலும் இடம் பெற வேண்டிய நிகழ்ச்சிகள் இடம் மாறுகின்றனவே. இது ஏன் என்று நேருக்கு நேர் நிகழ்ச்சியில் திருச்சி அண்ணாநகர் வி தி ரவிச்சந்திரனுடன் ராஜாராம் உரையாடிய போது பல நல்ல கருத்துக்கள் வெளி வந்தன என்று பாராட்டுகிறார். ஜுன் 4ம் நாள் எழுதிய கடிதத்தில் அமெரிக்காவைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டுவர்கள் பலர் தற்போது சீனாவைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். அவர்களுக்கு சீன வானொலி உதவுகிறது. அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் நீரில் பிரவசம் என்ற கட்டுரை பயனுள்ளதாக இருந்து என்று கூறுகிறார். வி-------நேயர் அருண் கூறிய கருத்துக்களை பரிசீலிக்கிறோம். பாராட்டுக்களுக்கு நன்றி. இணைய தளம் பல நேயர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. நமது ஒலிபரப்பின் எல்லையும் விரிவடைந்துள்ளது. இணையதளம் பற்றிய உங்கள் கருத்து பரிசீலிக்கப்படும். ரா-------ராசிபுரம் நேயர் ஜி மாலதி மே திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார்.