• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-02 22:26:54    
நண்பர்களே சக பணியாளர்களே

cri

வணக்கம். இந்திய பாணி நிறைந்த உணவு விடுதியில் இன்று நாம் மகிழ்ச்சியுடன் நண்பர்களோடு சேர்ந்து சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் 42வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றோம். தமிழ் பிரிவின் பணியாளர்களின் சார்பில் தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சியை மீட்டாய்வு செய்கின்றேன்.

42 ஆண்டுகளுக்கு முன் சீன தலைமை அமைச்சர் சோ அன் லாய் விடுத்த உலகிலான மக்களுடன் பழகுவோம் என்ற அறைகூவலுக்கு இணங்க சீனாவில் தமிழ் ஒலியை துவக்க வேண்டும் என்று கோரப்பட்டது. செந்தமிழ் ஓசை உலகெங்கும் பரவலாக்கும் வகையில் ஷாங்காய் அந்நிய மொழி கல்லூரியின் ஆங்கில துறையிலிருந்தும் ஷாங்காய் பூஃதான் பல்கலைகழகத்தின் ஆங்கிலத் துறையிலிருந்தும் பல மாணவர்கள் பெய்சிங் வந்து மொழி மாற்றி தமிழ் மொழியை கற்றத் துவங்கினர். எங்கள் முதலாவது தலைமுறையினர்களான எஸ் சுந்தரன், பி.லுசா, பொற்செல்வி ஆகியோர் இநத மூத்த தலைமுறையினர்களாவர். அவர்கள் 4 ஆண்டுகளாக தமிழ் கற்றுக் கொண்டு 1963ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதலாம் நாள் தமிழ் ஒலிபரப்பை அதிகாரப்பூர்வமாக துவக்கும் லட்சியத்தில் ஈடுபட்டனர். இப்போது தமிழ் வளர்ச்சிக்காக அவர்கள் தொடர்ந்து எங்களுடன் இணைந்து முயற்சி செய்து வருகின்றனர். இங்கே அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்

கடந்த 42 ஆண்டுகளில் தமிழ் ஒலிபரப்பு துவக்கத்தில் அரை மணி நேர கட்டமைப்பில் செய்திகள், சில நிகழ்ச்சிகள் மட்டும் ஒலிபரப்பாகின. சீனாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியுடன், சர்வதேச ரீதியில் சீனா பெற்றுள்ள செல்வாக்கு பெரிதாகியதால் தமிழ் ஒலிபரப்பு ஏற்கனவேயுள்ள நிகழ்ச்சி கட்டமைப்பில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதன் துறை வளர்ச்சியடைய வேண்டும். ஆகவே 2003ம் ஆண்டு டிசெம்பர் திங்கள் 28ம் நாள் தமிழ் இணைய தளம் நிறுவப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஜலை திங்கள் 15ம் நாள் முதல் அரை மணி நேர நிகழ்ச்சி கட்டமைப்பிலிருந்து ஒரு மணி நேர நிகழ்ச்சி கட்டமைப்பாக விரிவாக்கப்பட்டுள்ளது. இப்போது தமிழ் ஒலிபரப்பு ஓழுங்கான முறையில் வளர்ந்து வருகின்றது. இதில் அனைத்து பணியாளர்களின் கடும் அயரா உழைப்பு, நேயர்களின் ஆதரவு, நண்பர்களின் பங்களிப்பு ஆகியவற்றிலிருந்து பிரிக்க முடியாதது. 3 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி கற்றுக் கொண்ட மீனா, வான்மதி இருவரும் இரண்டாண்டு கால தமிழ் கல்வியின் பின்னணியில் துணிச்சலுடன் வேலையில் சேர்ந்து ஒலிபரப்பு செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இங்கே எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த கொண்டாட்ட வேளையில் தமிழ் வளர்ச்சியின் எதிர்காலத்தை பார்த்தால் அதற்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆகஸ்ட் திங்கள் முதலாம் முதல் தமிழ்பரப்பு லட்சியத்தில் மேலும் 4 புதிய மாணவர்கள் எங்களுடன் இணைந்து வேலை செய்ய துவங்குவர். அவர்கள் பேராசிரியர் பி லுசாவிடமிருந்து தமிழ் கற்றுக் கொள்கின்றனர். தமிழ் லட்சியத்தில் அடுத்தடுத்து புதியவர்கள் வந்து கலந்து கொண்டு வேலை செய்வதை கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். எல்லோரின் முயற்சியுடன் தமிழ் ஒலிபரப்பு மென்மேலும் சீராகவும் உறுதியாகவும் வளர்ச்சியடைவது திண்ணம் என்று நம்புகின்றேன். வணக்கம் சொல்லி விடைபெறுகின்றேன். மிக்க நன்றி.