அண்மையில் பெய்சிங்கில் நடைபெற்ற வட கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை பற்றிய ஆறு தரப்பு பேச்சுவார்த்தை அதற்கு முன் ரஷியா ஜப்பான் முதலிய நாடுகள் ஒரு ஒட்டுமொத்த திட்டத்தை முன்வைத்தன. ஒட்டுமொத்த திட்டம் என்றால் என்ன?அதன் முக்கிய அம்சம் என்ன? என்று சீனாவின் சியான்சு மாநிலத்தைசேர்ந்த நேயர் சன் லின் கேட்கிறார்.
தி கலையரசி அவருக்கு பதிலளிக்கிறார்.
சர்வதேச பேச்சுவார்த்தையில் பற்பல சிக்கலான பிரச்சினைகள் எதிர்நோக்கும் போது தூதாண்மை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற பல்வேறு தரப்புகள் உடன்பாடு ஏற்படக் கூடிய ஒரு ஒட்டுமொத்த செயலை மேற்கொள்ளும். இறுதி உடன்படிக்கை உருவாக்கும் வகையில் பல்வேறு தரப்புகளும் தங்களது தனது திட்டங்களை முன்வைக்கலாம். இந்த திட்டங்கள் அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்த திட்டம் என அழைக்கப்படுகின்றது. பேச்சவார்த்தையில் கலந்து கொள்கின்ற பல்வேறு தரப்புகளும் ஒரேநேரத்தில் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அல்லது பிரச்சினை எதையும் தீர்க்காமலும் இருக்கும். பல்வேறு தரப்புகள் திட்டத்தின் குறியிட்ட ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற பிரச்சினைகளை தீர்க்காமல் விடுவதற்கு அனுமதி கிடையாது. பேச்சுவார்த்தையில் உள்ள பல்வேறு தரப்புகள் பற்பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் தருணத்தில் உருப்படியாக ஒவ்வொரு பிரச்சினையாக தீர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டு பல்வேறு தரப்புகளுக்கு ஏற்புடையக் கூடிய ஒரு திட்டத்தை கண்டறிய முடியாத நிலையில் பேச்சுவார்த்தை தேக்க நிலையில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்க ஒட்டுமொத்த திட்டம் ஒன்று முன்வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அனைத்து பிரச்சினைகளும் சேர்க்கப்பட வேண்டும். அபோது பல்வேறு தரப்புகளும் ஏற்றுக் கொள்ளும். இந்த வழிமுறை தூதாண்மை முயற்சிகளில் விட்டுக் கொடுக்கும் ஒரு முறை என அழைக்கப்படுகின்றது.
கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை குறித்து ரஷியாவும் ஜப்பானும் தனித்தனியாக ஒட்டுமொத்த திட்டங்களை முன்வைத்தன. 2003ம் ஆண்டு ஜனவரி திங்களில் ரஷியா முதலில் வட கொரிய அணு பிரச்சினையை தீர்க்கும் ஒட்டுமொத்த திட்டத்தை முன்வைந்த கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதம் இல்லாத ஒரு நிலையை உறுதிபடுத்துவது, அனைத்து தரப்புகளும் முன்பனா கையொப்பமிட்ட பல உடன்படிக்களை கண்டிப்பான முறையில் செயல்படுத்துவது தொடர்புடைய தரப்புகள் இருதரப்பு மர்றும் பலதரப்பு பேச்சுவார்தை நடத்துவது என்பன இந்த ஒட்டுமொத்த திட்டத்தில் அடங்கும். அதேவேளையில் வட கொரிய அணு பிரச்சினையை ஐ.நா பாதுகாப்பு அவையிடம் விடுவதற்கு காலம் இன்னும் கனியவில்லை என்று ரஷியா கருதுகின்றது.
வட கொரியா அறிக்கை வெளியிட்டு, அணு ஆயுதங்களை கலைப்பதற்கு முன்பாக அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகாமல் அந்த ஒப்பந்தத்தின் துணை உடன்படிக்கையில் கையொப்பமிட வேண்டும். ஏவுகணை வளர்ச்சி திட்டத்தை கைவிட்டு வேதியியல் ஆயுதங்களை அழிக்க வேண்டும் என்று ஜப்பான் தனது ஒட்டுமொத்த திட்டத்தில் வட கொரியாவை கோரியது.
|