• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-09 20:12:42    
தீபம் ஏற்றும் விழா

cri

சீனாவின் 10வது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒளிப்பந்தம் ஏற்றும் தொடர் ஓட்டத்திற்காக "சீன வளர்ச்சி தீபம்" எடுக்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் முற்பகல்,பெய்சிங்கிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. சீன விண்வெளி பயண வீரர் யாங் லி வெய் சூரிய வெப்ப கருவியால் தீபத்தை ஏற்றிக் கொண்டார். இந்த "சீன வளர்ச்சி தீபம்" ஜியாங்சு மாநிலத்தின் தலைநகரான நான்ஜிங் நகரிலுள்ள 10வது தேசிய விளையாட்டு ஆணை மையத்தில் வைக்கப்படும்.

இதையும் ஜூலை திங்கள் முதல் நாள் நான்ஜிங் நகரிலுள்ள சு ச்சின் ஷன் வான் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து எடுத்த "அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத் தீபத்தையும்", ஜூலை 15ஆம் நாள் ஹௌனான் மாநிலத்தின் ஷாங்ச்சியூ நகரில் எடுக்கப்பட்ட "சீன நாகரிக தீபத்தையும்" கொண்டு, ஆகஸ்ட் 12ஆம் நாள் பெய்சிங் தியன் ஆன்மென் சதுக்கத்தில் 10வது தேசிய விளாயாட்டு போட்டிக்கான ஒளிப்பந்தம் ஏற்றப்படும். அப்போது, நாடு தழுவிய, 10வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான தீபத்தை ஏந்திய தொடர் ஓட்டம் அதிகாரப்பூர்வமாக துவங்கும்.

நீச்சல் 11வது உலக நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டி ஜூலை 31ஆம் நாள் கனடாவின் மான்ட்ரியால் நகரில் நிறைவடைந்தது. சீன அணி 5 தங்கம் 5 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடம் பெற்றது. அமெரிக்கா 17 தங்கம் 15 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை பெற்று முதலிடம் வகிக்கின்றது. ஆஸ்திரேலியா 13 தங்கம் 8 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடம் வென்றது.

கூடைப் பந்து முதலாவது ஸ்டான்கோவிச் கூடைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி ஜூலை 31ஆம் நாள் பெய்சிங்கில் நிறைவடைந்தது. லிதுவானிய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. பந்தயத்தை நடத்திய சீனா நான்காம் இடம் வென்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து 6 அணிகளும் பல்வேறு கண்டங்களில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளாகும்.

தென் கொரியாவின் JEONJU நகரில் நான்கு வலுவான மகளிர் கால்பந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. முதலாவது ஆட்டத்தில் சீன அணி 0-2 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியிடம் தோல்வி கண்டது. கடந்த 15 ஆண்டுகளில் சீன மகளிர் கால்பந்து அணி தென் கொரிய அணியிடம் தோல்வி கண்டது இதுவே முதல் முறையாகும். மற்ற ஆட்டம் வட கொரிய அணிக்கும் ஜப்பானிய அணிக்குமிடையில் நடைபெற்றது. வட கொரிய அணி 1-0 என்று கோல் கணக்கில் ஜப்பானிய அணியைத் தோற்கடித்தது. இந்த போட்டியின் அனைத்து ஆட்டங்களும் ஆகஸ்ட் திங்கள் 6 ஆம் நாள் நிறைவடையும்.