• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-11 22:15:14    
கால்பந்து

cri

ஜூலை 31ஆம் நாள் கிழக்காசிய கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டி தென்கொரியாவின் DAEJEON நகரில் துவங்கியது. முதலாவது ஆட்டத்தில் சீன அணி தென் கொரிய அணியுடன் மோதியது. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தன. மற்றொரு ஆட்டம் வட கொரியாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் நடைபெற்றது. வட கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானிய அணியைத் தோற்கடித்தது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஆகஸ்ட் திங்கள் 7ஆம் நாள் நிறைவடையும்.

பெய்சிங் ஒலிம்பிக் பற்றி JOHNSON நிறுவனம் 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகளின் கூட்டாளி என பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுக் கமிட்டி ஜூலை 26ஆம் நாள் அறிவித்தது. இவ்வாறு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகள், பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டி, சீன ஒலிம்பிக் கமிட்டி, 2006ஆம் ஆண்டு துலிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் சீன விளையாட்டு வீரர்களுக்கு நிதி மற்றும் பொருள் ஆதரவை இந்த நிறுவனம் வழங்கும். இவற்றில் முதல் உதவி பொருட்கள், விளையாட்டு வீரரின் உடல்தூய்மையை பாதுகாக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், மருத்துவ கருவிகள், மருந்துகள் முதலியவை இடம்பெறுகின்றன.

விளையாட்டு வீரர்களுக்கு பால்கோ ஆய்வகம் தயாரித்த தடுக்கப்பட்ட மருந்தை விநியோகித்ததாக 73வயதான அமெரிக்காவின் தடகள பயிற்சியாளர் REMI KORCHEMNY ஜூலை 30ஆம் நாள் அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். தாம் மேலும் கூடுதலான விளையாட்டு வீரர்களுக்கு இத்தைகைய மருந்துகளை விநியோகித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க சட்டவிதிகளின் படி, REMI KORCHEMNY தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதால், சிறைத் தண்டனை தவிர்க்கப்படலாம். பால்கோ ஆய்வகத்தின் பல அதிகாரிகள் THG என்ற ஊக்க மருந்தை தயாரித்ததால் அவர்கள்மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த ஆய்வகத்தை துவக்கியவர் VICTOR CONTE உள்ளிட்ட 4 பேர் தங்களது குற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அக்டோபர் திங்களின் நடுப்குதியில் இந்த பால்கோ ஆய்வகத்தின் வழக்கில் தீர்ப்பை நீதி மன்றம் வெளியிடும்.