• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-09 08:49:51    
சமாதானத்தில் சமரசம் செய்த ஐன்ஸ்டீன்

cri
அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தமது சார்புக் கோட்பாட்டை உருவாக்கிய நூற்றாண்டு இது. தூரமும் நேரமும் தனித்து இயங்கக் கூடியதல்ல. ஒன்றை ஒன்று சார்ந்திருக்கக் கூடியது என்று கூறும் சார்புக் கோட்பாட்டைக் கண்டுபிடித்து E=mc2 என்ற புகழ்மிக்க சூத்திரத்தை உருவாக்கினார். அணுகுண்டு தயாரிப்புக்கு இந்தச் சூத்திரம் அடிப்படையாக அமைந்தது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் முதலாவது அணு குண்டை அமெரிக்கா வீசியபோது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிம் மக்கள் மாண்டனர். மூன்று நாட்கள் கழித்து நாகசாகி நகரில் இன்னொரு அணு குண்டு வீசப்பட்டதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதன் பிறகு 6 நாட்கள் கழித்து ஜப்பானியப் பேரரசர் ஹிரோஹித்தோ ஜப்பான் சரணடைவதாக வானொலியில் அறிவித்தார். அன்றில் இருந்து அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கத்தை ஜப்பான் நடத்தி வருகின்றது.

மனித குலத்தைப் பதைபதைக்கச் செய்த இந்தக் கொடூரமான அணு குண்டு தாக்குதலைக் கண்டித்து செயி ஷினோஹரா என்ற தத்துவ ஞானி அணு குண்டின் தந்தை எனப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு கடிதம் எழுதினார். ஆயுளின் அந்திமக் கட்டத்தில் இருந்த ஐன்ஸ்டீன இந்தக் கண்டனக் கடிதத்திற்கு தமது கைப்படவே ஒரு பதில் கடிதம் எழுதினார். ஜப்பான் மீது அணு குண்டு போடப்பட்டதை நான் எப்போதுமே கண்டித்து வந்திருக்கிறேன். ஆனால் அந்த அபாயகரமான முடிவு எடுக்கப்படுவதைத் தடுக்க என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்று 1953ம் ஆண்டு ஜுன் 23ம் நாள் ஷினோஹராவுக்கு எழுதிய கடிதத்தில் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டார். இந்தக் கடிதத் தொடர்பு இருவருக்கும் இடையில் தொடர்ந்தது. அணு குண்டுகள் உருவாக்கப்பட்டதில் எனக்கு ஆறுதல் தரும் ஒரேவிஷயம் என்னவென்றால் இப்போது அவற்றின் அச்சுறுத்தல் என்றென்றும் இருக்கும். இந்தப் பயத்தினால் அணுகுண்டுக்கு எதிராக சர்வதேசப் பாதுகாப்பு முறை விரைவில் உருவாகும் என்று இன்னொரு கடிதத்தில் ஐன்ஸ்டீன் கூறினார்.

அணு குண்டு வீசப்படுவதைத் தடுக்க முடியாமல் தவித்த சமாதானப் பிரியரான ஐன்ஸ்டீன் ஒரு சமயத்தில் போருக்கும் வக்காலத்து வாங்கிப் பேசியிருக்கிறார். யூத வம்சாவழியில் வந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1933ல் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானதும் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினார். அப்போது நாஜி ஜெர்மனிக்கு எதிராக படைபலம் பயன்படுத்தப்பட்டதை நியாயப்படுத்தி ஒரு கடிதத்தில் ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார். நான் ஒரு முழுமையான சமாதான வாதி அல்ல. ஆனாலும் சமாதானம் தான் தேவை என்று நான் நம்புகிறேன். அதாவது படைபலத்தைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகளும் உள்ளன. என்னையும் எனது மக்களையும் ஒழித்துக் கட்டுவதை மட்டுமே ஒரே குறிக் கொளாகக் கொண்ட எதிரி எனக்கு முன்னால் வரும் போது படைப்லத்தைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்று ஐன்ஸ்டீன் எழுதினார்.

1954ம் ஆண்டு ஜுலை வரை ஐன்ஸ்டீனுக்கும் ஷினோஹராவுக்கும் இடையே கடிதத் தொடர்பு நீடித்தது. கண்டனக் கடிதத்தில் தொடங்கி நட்புறவு மலர்ந்தது எனது கணவர் கோபதி தோடு எழுதிய கடிதத்திற்கு ஐன்ஸ்டீன் எரிச்சலுடன் பதிலளித்தார். பின்னர் கடிதத் தொடர்பு மூலம் இருவரும் நண்பர்களானார்கள் என்கிறார் ஷினோஹராவின் மனைவி.

இந்தக் கடிதங்களை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.