கடந்த 10 ஆண்டுகளில், திபெத்தில் சுமார் 1700 திட்டப்பணிகளை செயல்படுத்த சீனாவில் பல்வேறு மாநில அரசுகளும், தொழில் நிறுவனங்களும் 640 கோடி யுவான் வழங்கியுள்ளன. இதனால் திபெத்தின் சமூக பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது.1994ஆம் ஆண்டு, மத்திய அரசு திபெத் பணி பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தி, மத்திய அரசு துறைகளும் 15 மாநிலங்களும் நகரங்களும் திபெத்துக்கு உதவி செய்யும் கொள்கையை வகுத்தது.2001ஆம் ஆண்டு முதல் திபெத் பொருளாதாரம் தொடர்ந்து 12 விழுக்காடு வளர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளது.
|