வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்தித்துள்ளோம். முதலில் கடந்த முறை நாம் படித்தத்தை பார்ப்போம்.
BAO QIAN
MA FAN NIN LE
BAO QIAN என்றால், மன்னித்துக் கொள்ளுங்கள், அல்லது மன்னிக்கவும் என்பது பொருள்.
MA FAN NIN LE என்றால், உங்களுக்கு தொந்தரவு தந்ததற்கு பொறுத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த இரண்டு வாக்கியங்களை மீண்டும் படியுங்கள்.
BAO QIAN
MA FAN NIN LE
இப்பொழுது ஒரு புதிய உரையாடலை பார்ப்போம். இந்த உரையாடல் பாடநூலின் 19ஆம் பக்கத்தில் உள்ளது.
BAO QIAN, BAO QIAN, RANG NIN DENG LE. (பௌ ச்சியன், பௌ ச்சியன், ழங் நின் தங் லா)
MEI GUAN XI, MEI GUAN XI. (மெய் குவன் சி, மெய் குவன் சி)
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு,
BAO QIAN BAO QIAN, RANG NIN DENG LE.
மிகவும் மன்னிக்கவும், உங்களைக் காத்திருக்க வைத்துவிட்டேன்.
MEI GUAN XI, MEI GUAN XI.
பரவாயில்லை, பரவாயில்லை!
தனது மன்னிப்பு மனநிலையை வலியுறுத்தும் வகையில், BAO QIAN (பௌ ச்சியன்)என்ற சொல்லை இரண்டு முறை கூறலாம். எடுத்துக் காட்டாக, முன்பு நாம் படித்த DUI BU QI, WO LAI WAN LE。மன்னித்துக் கொள்ளுங்கள், நான் தாமதமாக வந்தேன் என்ற வாக்கியத்தை, BAO QIAN, BAO QIAN, WO LAI WAN LE என்றும் சொல்லலாம். அதாவது, மிகவும் மன்னிக்கவும் நான் தாமதமாக வந்தேன். எனவே இந்த இரண்டு வாக்கியங்கள் ஒரே பொருள்தான்.
இப்பொழுது இந்த உரையாடலை எங்களுடன் சேர்ந்து படியுங்கள்
BAO QIAN, BAO QIAN, RANG NIN DENG LE
MEI GUAN XI, MEI GUAN XI
நேயர்கள், இன்று நாம் ஒரு புதிய உரையாடலை படித்துள்ளோம். நீங்கள் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் அதிகம் பயிற்சி செய்யுங்கள். சாதாரண நாட்களில் நீங்கள் அம்மாவிடம் மன்னிப்பு கேளும் போது, நீங்கள் சீன மொழியில் மன்னிப்பு கேளுங்கள். அம்மா மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்று நம்புகின்றோம்.
நேயர்களே, இன்று நாம் ஒரு புதிய உரையாடலை பதித்துள்ளோம். நீங்கல் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் அதிகம் பயிற்சி செய்யுங்கள். சாதாரண நாட்களில் நீங்கள் அம்மாவிடம் மன்னிப்பு கேளும் போது, நீங்கள் சீன மொழியில் மன்னிப்பு கேளூங்கள். அம்மா மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்று நம்புகின்றோம்.
|