• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-10 11:26:47    
சில கருத்துகள்

cri
வி---------தாஜாஹாங் நேயர்களே, நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்கல் அனைவரையும் மகிழ்ச்சியுடன் சந்திக்கிறோம். ராஜா, இன்றைக்கு சந்திக்கிறோம். ராஜா, இன்றைக்கு வந்துள்ள கடிதங்கலைப் பார்க்கலாமா. ரா-------பார்க்கலாமே. சேந்தமங்கலம் கே சுந்தரம் மே திங்கள் நிகழ்ச்சிகள் பர்றஇ கருத்துக்களை எழுதியுள்ளார். குறிப்பாக, வானொலி மூலமாக பல நாடுகளை அறிந்து கொள்ள ஆதிமனிதன் யார். என்ற அறிவியல் கட்டுரை உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, அலைவரிசை மூலம் சீனா பெற்ற நட்பு என்ற கலையரசியின் செய்தித் தொகுப்பை பாராட்டியுள்ளார். கோவை மாவட்டம் தென் பொன்முடி நேயர் தெ நா மணி கண்டன், ஜுன் திங்களில் ஒலிபரப்பான பல நிகழ்ச்சிகலைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, 23-6-05 அன்று பெய்ச்சிங் நகரின் அட்வான்ஸ் பிசினஸ் மார்க் தொழிற் சாலைகளை நேரில் பார் வையிட்டு ராஜாராம் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியும், சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் ஆட்டிறைச்சி சோறு தயாரிப்பு முறையும் நன்றாக இருந்தன. இங்கு அசைவ பிரியாணியி காய்கறிகளை சேர்க்க மாட்டோம். இந்த ஆட்டிறைச்சி சோற்றில் சேரட் சேர்ப்பது புதுமையாக இருந்தது. தாங்கள் கூறியபடி சமைந்துப் பார்த்தேன். சைவமும் அசைவமும் கலந்து கூட்டுபிரியாணி ஒருவித சுவையாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். வி-------பாராட்டுக்கு நன்றி நேயர்களே. அடுத்து ரா-------மதுரை ஐராவத நல்லூர் நேயர் எஸ் பாண்டியராஜன், மே திங்கள் நிகழ்ச்சிகள் பற்றி எழுதியுள்ள கடிதம். குறிப்பாக, 24-5-05 அன்று சீனப் பண்பாடு நிகழ்ச்சி மூலம் வென்குதிரை ஆலயம் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இந்திய-சீன நட்புறவுச் சின்னமாக இது விளங்குகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். தாங்சி இன மக்கள் கொக்கு நடை நடப்பதன் மூலம் தங்களின் வழிபாட்டுக் கடனை நிறைவு செய்கின்றனர் என்றும் பாரம்பரியமாக இந்த வழியாட்டு முறை தொடர்கிறது என்றும் அறிந்து கொல்ள முடிந்தது. கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் நேயர் பி தங்கராஜ் ஏப்ரல் மே ஜுன் திங்கல் நிகழ்ச்சிகள் பலவற்றைப் பற்றி எழுதியுள்ளார். ஆரணி கங்கா-யாங்ச்சி நேயர் மன்றம் வழங்கிய தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது என்று கூறுகிறார். 30 புள்ளிப்பட்டி நேயர் ஜி சரண்யா தம்மைப் புதிய நேயர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஏப்ரல் 16 அன்று தமிழ் மூலம் சீனம் புத்தகம் பற்றி பகளாயூர் நாச்சி முத்துவும், தமிழ்ச் செல்வனும் உரையாடியது நன்றாக இருந்தது. அந்தப் புத்தகம் பள்ளிப் பாடம் புத்தகம் போல் அச்சடிக்கப் பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளார். 30 பள்ளிப்பட்டி நேயர் சந்திரசேகர் சீன வானொலியில் தான் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சி மலர்ச்சசோலை என்று கூறி, அதில் பயனுள்ள தகவல்கள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். திரு வள்ளூர் மாவட்டம் கீழ்மணம்பேடு என்ற ஊரைச் சேர்ந்த புதிய நேயர் கே சித்ரா, மேத் திங்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டியுள்ளார். மே 5 அன்று கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கலையரசி கூறிய பதில் நன்றாக இருந்தது. நேயர் நேரத்தில் இலங்கையைச் சேர்ந்த பாடசாலை மாணவியின் சுனாமி பற்றிய கவிதை மனதை ஈர்த்தது என்று எழுதியுள்ளார்.