• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-12 20:10:13    
கஜக் இனத்தின் கல்வி

cri

தமது குழந்தையைப் போலவே குரிமுஹன், அனைத்து மாணவர்கள் மீதும் அன்பினைக்காட்டுகின்றார். சில வேளையில், ஓரிரு குழந்தைகள், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத போது, அவர் தமது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு உதவியாக கொடுப்பார். குரிமிரா என்ற மாணவி, இது பற்றி அவர் கூறியதாவது:

"2004ம் ஆண்டில், குடும்ப பிரச்சினை காரணமாக நான் பள்ளிக்குப் போக வில்லை. ஆசிரியை குரிமுஹன் இதை அறந்த பின், தாமாகவே என் வீட்டிற்கு வருகை தந்து, பள்ளிக்கு வருமாறு என்னை அறிவுறுத்தினார். கல்விக் கட்டணத்தையும் படிப்புக்கான பொருள்களையும் வாங்கி தந்தார். அவருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்." என்றார், அவர்.

குரிமுஹனின் பண உதவியுடன் பலர் பள்ளிக்குப் போக முடிந்தது. கடந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் மூன்று மாணவர்களுக்கு அவர் 6000 யுவானை கொடுத்தார். 600 யுவான் என்றால், அவரது திங்கள் வருமானத்தில் 50 விழுக்காடு ஆகும். ஆசிரியைவின் செயல், மாணவர்களை மனமுருகச் செய்தது. மாணவர் ஜச்சீலா கூறியதாவது:

"நாங்கள் ஆசிரியை குரிமுஹனை மிகவும் நேசிக்கின்றோம். படிப்பு வாழ்க்கை ஆகியவற்றில் எங்களுக்கு பெரும் உதவி அளித்துள்ளார். நேரம் குறைவு காரணமாக, பள்ளியில் இருக்கும் போது மத்தியானத்தில் வீடு திரும்பமுடியவில்லை. அப்போது, எங்களை அவரது வீட்டிற்கு வரச் சொல்லி இணைந்து சாப்பிட்டோம். ஆசிரியை குரிமுஹனின் தன்னலமற்ற செயல், எங்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. பெரியவராக வளர்ந்த பின், குரிமுஹன் ஆசிரியைப் போலவே நல்லவராக இருக்க வேண்டும்." என்றார்.

அவரது பணியை ஆதரிக்க, குரிமுஹனின் கணவன், சொகுசான சிறு நகர வாழ்க்கையைக் கைவிட்டு, மலைப்பிரதேசத்துக்கு வந்து ஒரு ஆசிரியராகினார். தம் கணவன் பற்றிக்குறிப்பிட்ட போது அவர் கூறியதாவது:

"பணியில் அவர் எனக்கு மிகப் பெரும் ஆதரவு அளித்தார். குடும்ப வேலை அனைத்துக்கும் அவர் பொறுப்பேற்றார். நான் மனநிமதியோடு படிப்பதற்கு உதவிட, அவர், குழந்தைகளை கவனித்தார். குடும்ப வேலை செய்தார்." என்றார்.

குரிமுஹனின் செயல்கள், பலரை மனமுருகச் செய்தன. இப்போது மலைப்பிரதேசத்துக்கு வந்து ஆசிரியர்களாகப் பணிபுரிய பலர் விரும்புகின்றனர். குரிமுஹன் இருக்கும் பள்ளியின் முதல்வர் தொர்க்கன் ஹான்ஸ் பேசுகையில், "குரிமுஹன், ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார். அவர், அனைவருக்கும் நம்பிக்கையும் துணிவும் கொடுத்துள்ளார். அனைவரும் அவரை மிகவும் மதிக்கின்றார்கள்" என்றார்.