• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-16 16:31:29    
கடந்த வாரத்தில் உலக விளையாட்டுப் போட்டிகள்

cri

கால் பந்து 9 நாட்கள் நீடித்த 2வது கிழக்காசிய கால் பந்து சாம்பியன் பட்டப் போட்டி ஆகஸ்ட் திங்கள் 7ஆம் நாள் தென் கொரியாவின் DAEGUE நகரில் நிறைவடைந்தது. ஆடவர் பிரிவுப் போட்டியில் சீன அணி 1-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியுடன் போட்டியை சமன் செய்தது, 2-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிய அணியுடன் போட்டியை சமன் செய்தது. 2-0 என்ற கோல் கணக்கில் வட கொரியாவைத் தோற்கடித்தது. மகளிர் பிரிவில், சீன அணி திறமையுடன் விளையாடவில்லை நான்காம் இடம் மட்டும் பெற்றது.

தடகளப் போட்டி பத்தாவது உலக தடகளச் சாம்பியன் பட்டப் போட்டி ஆகஸ்ட் 6ஆம் நாள் ஹெல்சிங்கியில் துவங்கியது. சீனாவின் 35 வீரர்கள் உள்ளிட்ட, மொத்தம் 209 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்கின்றனர். ஆகஸ்ட் 7ஆம் நடைபெற்ற மகளிருக்கான 20 கிலோமீட்டர் நடைப் பந்தயத்தில் ரஷிய வீராங்கனை இவன்நோவா ஒரு மணி 25 நிமிடம் 41 வினாடி என்ற சாதனையுடன் புதிய உலக சாதனையை உருவாக்கினார். ஆடவருக்கான நூறுமீட்டர் ஓட்டப் போட்டியில் அமெரிக்க வீரர் காட்லின் 9.88 வினாடியில் தூரத்தை ஓடி முடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆகஸ்ட் பத்தாம் நாள் நடைபெற்ற ஆடவருக்கான 110 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சீன வீரர் லியூ சியாங் 13.73 விநாடி என்ற சாதனையுடன் பிரிவில் முதலிடம் பெற்றார். இதனால் அவர் நாளை நடைபெறவுள்ள அரை இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி வெற்றிருக்கின்றார். சீனாவின் இன்னொரு வீரார் ஷி துங் பொங்கும் இந்த தகுதியைப் பெற்றுள்ளார்.

ஆகஸ்ட் 6 ஆம் நாள் போலந்தின் வார்சாவில் நடைபெற்ற 2005 உலகின் நவீன ஐந்து வகை உடல்திறன் விளையாட்டுகள் சாம்பியன் பட்டப் போட்டியில் சீன வீரர் ச்சியன் சென் ஹுவா ஆடவருக்கான தனியார் நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்றார். இதுவரை, ஆசிய விளையாட்டு வீரர் ஒருவர் இந்த நிகழ்ச்சியின் உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

பெய்சிங் ஒலிம்பிக் பற்றி ஓர் உலகம் ஒரே கனவு என்ற 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய முழக்கத்தின் உள்ளடக்கத்தை உலகெங்கும் பிரசாரம் செய்யும் வகையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டு கமிட்டி ஆகஸ்ட் திங்களின் பிற்பாதி முதல் உலகளவில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தலைப்பு முழக்கம் எழுதப்பட்ட நேர்த்தியான கையெழுத்து படைப்புகள், விளம்பரப் படைப்புகள் ஆகியவற்றைத் திரட்டத் துவங்கும்.