• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-18 06:36:35    
ஆஸ்திரேலியாவை குறுக்காகப் பயணம்

cri

வாலிபால் ஆகஸ்ட் 7 ஆம் நாள் சீனாவின் நிங் போ நகரில் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டு உலக மகளிர் வாலிபால் சாம்பியன் பட்டப் போட்டிக்கான ஆசிய பிரதேசத்தின் தகுதி போட்டியில் சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் சீனத் தைப்பெய் அணியைத் தோற்கடித்து, நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 2006ஆம் ஆண்டு உலக மகளிர் வாலிபால் சாம்பியன் பட்ட போட்டியின் இறுதியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளது.

மாதிரி படகுப் பயணப் போட்டி 14வது உலக மாதிரி படகுப் பயணச் சாம்பியன் பட்டப் போட்டி செக்கின் தென் பகுதியிலுள்ள புடெயோவிஸில் நிறைவடைந்தது. 14 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 300க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். சீன அணி 2 தங்கம் 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

டென்னிஸ் அமெரிக்க அக்குரா மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7ஆம் நாள் நடைபெற்றது. 19வயதான சீன வீராங்கனை பெங் ஷுவய் 0-2 என்ற செட் கணக்கில் பிரான்சின் புகழ் பெற்ற வீராங்கனை மேரி. பியர்ஸிடம் தோல்வி கண்டார். இந்த போட்டியில் இளைஞர் பெங் ஷுவய் எலினா.டிமென்தியோவா, கிம்.கிளைஜெஸ்டர்ஸ் ஆகிய இரண்டு உலகில் புகழ் பெற்றவர்களை தோற்கடித்து, மாபெரும் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை குறுக்காகப் பயணம் சீனாவின் சென்சென் நகரைச் சேர்ந்த இளம் ஆசிரியர் லின் மிங் வெய் ஆகஸ்ட் 5ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையிலுள்ள பாஸ் எனும் இடத்திலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஊடாக செல்லும் 20 நாட்கள் பயணத்தை துவக்கினார். அவருடைய திட்டம் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியாவை குறுக்காக கடந்து சென்ற முதலாவது சீனர் அவராவார். இத்துடன் இன்றைய விளையாட்டுச் செய்திகள் நிறைவு பெறுகின்றன.

படகு ஓட்டப் போட்டி 7வது உலக டிராகன் படகு ஓட்டச் சாம்பியன் பட்டப் போட்டி ஆகஸ்ட் 7 ஆம் நாள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நிறைவடைந்தது. நான்கு நாள் தீவிரமான போட்டிகள் மூலம் சீன அணி மொத்தம் 8 தனிப்பட்ட போட்டிகளில் 7 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றது. அத்துடன் மொத்த சாதனையில் இந்த பிரிவு சாம்பியன் கோப்பை பெற்றது.