• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-15 10:56:44    
இந்தியாவில் வரவேற்கப்படும் சீனத் திரைப்படம்

cri

அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சீன இந்திய ஒத்துழைப்பு இடைவிடாமல் பெருகிவருவதுடன், சீனாவின் திரைப்படங்களும் இந்தியாவில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. அண்மையில் புதுதில்லியில் நிறைவடைந்த சீனத் திரைப்பட வாரத்தில்"மகத்தான வீரர்","நான் கவலைப்படவில்லையா?","நீதிபதியான அம்மா","உங்களுடன் இருக்கின்றேன்","செல் போன்"ஆகிய திரைப்படங்கள் திரையிடப்பட்ட போது, மிக அதிக பார்வையாளர்கள் கண்டு களித்தனர். அரங்கத்தில் காலி இடம் இல்லவே இல்லை. மேலும் அதிக சீனத் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த பார்வையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு, இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் பண்பாட்டுப் பகுதி, இந்திய திரைப்படச் சங்கத்துடன் ஒத்துழைத்து ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சீனாவின் தலைசிறந்த திரைப்படங்களை இந்திய மக்களுக்காக திரையிட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சீனாவின் சியோ சியாங் திரைப்பட நிறுவனம் தயாரித்த 《போயிட்டு வா》எனும் திரைப்படம் பார்வையாளர்களின் வாக்களிப்பு மூலம், தலைசிறந்த திரைப்படமாக மதிப்பிடப்பட்டது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் பரிசு பெற்ற பின் செய்தியாளரிடம் பேசுகையில், இந்த திரைப்படம் இந்தியாவில் மிக உயர்வாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திரையிடப்பட்ட போதெல்லாம் அரங்கில் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். நடைபாதையிலும் ஆட்கள் நின்றனர் என்று கூறினார். திரைப்படம் திரையிடப்பட்டதும் ரசிகர்கள் அவரிடம் வந்து, "இது ஒரு மிகவும் அழகான திரைப்படம், பார்க்கும் போது கண்ணீர் வழந்ததை தடுக்க முடியவில்லை" என்று தெரிவித்தனர்.

இந்திய மக்கள் சீனத் திரைப்படங்களில் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். பெரும்பாலான ரசிகர்கள் சீனாவின் இயக்குநர்கள் சாங் யி மௌ, சென் கை கோ ஆகிய இருவரை நன்கு அறிந்திருக்கின்றனர். இந்தியா, உலகில் மிக பெரிய திரைப்படத் தயாரிப்பு நாடாக விளங்குகின்றது. மும்பையிலும் பாலிவுட் திரைப்பட நகரம் எனப்படும் மும்பை உலகில் புகழ்பெற்றது. இவ்வளவு அதிக திரைப்பட வளங்களைக் கொண்ட இந்தியர்கள், சீனத் திரைப்படத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன், என்று தில்லி பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வகத்தின் சீன மொழியியல் பேராசிரியர் மோப்புட் செய்தியாளரிடம் கூறினார்.