• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-17 17:28:25    
இருதய நோயால் ஆண்டுக்கு 1.70 கோடி பேர் உயிரிழப்பு

cri
உலகில் இருதய நோய் மற்றும்வலிப்பு நோய்களால் ஆண்டுதோறும் ஒரு கோடியே 70 இலட்சம் பேர் உயிரிழக்கின்றார்கள் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலக இருதய தினம் நாளை அனுசரிக்கப்படுகின்றது. இதையொட்டி இருதயநோய் மற்றும் அந்நோய் தடுப்பு குறித்த புள்ளிவிபர தகவலை வெளியிட்டுள்ளது. அதில் வளர்ந்து நாடுகளை விட வளரும் நாடுகளிலும் ஏழை வளரும் நாடுகளிலும் தான் இருதய நோயால் உயிரிழப்பவர்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளைசேர்ந்த மக்கள் சாப்பிடும் உணவில் அதிக கொழுப்புச்சத்து இருப்பதும், அதிக எடை, உடற்பயிற்சி இல்லாமை ஆகிவேயே இருதய நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணம். இதனால் ஆண்டுதோறும் உலகில் இருதய நோய் மற்றும் வலிப்புநோய்களால் ஒரு கோடியே 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றார்கள். இது மற்று காரணங்களால் நிகழும் மரணங்களை விட அதிகம் என்கிறது உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரம்.

தவறான பல்லை பிடுங்கியதற்காக தவறான டாக்டரை தாக்கியவர்

ஜெர்மனி நாட்டில் பெல்லீல்டு நகரைச் சேர்ந்த ஒருவர் சொத்தைப் பல்லை பிடுங்குவதற்காக பல் டாக்டரிடம் சென்றார். அவர் சொத்தைப் பல்லைப் பிடுங்குவதற்கு பதிலாக நல்ல பல்லைப் பீடுங்கிவிட்டார். இது 1992-ம் ஆண்டு நடந்தது.

அவர் இதை மற்க்கவே இல்லை. டாக்டர் மீது கோபமாகவே இருந்தார். சமீபத்தில் ஒரு நாள் நன்றாக குடித்தார். அப்போது டாக்டரைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவரைதே தேடிக்கொண்டு பல் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். தவறான பல்லைப் பிடுங்கிய டாக்டர் டூட்டி முடிந்த வீட்டுக்குப் போய்விட்டார். அது தெரியாமல் அங்கு டூட்டியில் இருந்த டாக்டரைப் பார்த்து அவர்தான் பல்லைப் படுங்கியவர் என நினைத்து நன்றாக மோத்திவிட்டார்.