வணக்கம் நேயர்கள் எங்கள் தமிழ் இணையத்திற்கு வந்து கேள்வியும் பதிலும் பகுதியை திறந்து சில விடைகளைப் படிக்கலாம். இன்றைய கட்டுரையில் சீனாவின் சியாங்சி மாநிலத்தின் நேயர் வாங் லின் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கின்றோம். அண்மையில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பார்வையாளராகியுள்ளன. பார்வையாளர் என்றால் என்ன என்று வாங் லின் கேட்டார்.
பார்வையாளர் என்பது அரசு சாரா அரசியல் பொருளாதார குழு சர்வதேச, அரசு சாரா நிறுவனங்கள் சர்வதேச அமைப்பில் கலந்து கொள்ளும் ஒரு தகுதியாகும்.
அரசு சாரா அரசியல் பொருளாதார சமூக மற்றும் தேசிய விடுதலை இயக்கங்கள், அரசுகளுக்கிடையிலான நிறுவனங்கள் பார்வையாளர் என்ற முறையில் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்வதை பெரும்பான்மையான சர்வதேச நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. இத்தகைய ்ரசு சாரா அமைப்புக்கள் தத்தமது அரசுகளின் கருத்துக்களை அல்லது தங்களை அனுப்பும் நிறுவனங்கள், அல்லது தனியாரின்
கருத்துக்களை ஒரு தகவலாக மாநாட்டிற்கு வழங்குகின்றன. பொதுவாக கூட்டம் நடைபெறும் போது, தற்காலிகமாக அவர்கள் பார்வையாளர் முறையில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். சில சர்வதேச நிறுவனங்கள் நிரந்தர பார்வையாளர் பிரதிநிதிக் குழுவை ஏற்றுக் கொள்கின்றன.
பொதுவாக சர்வதேச நிறுவனங்களின் கூட்டங்களில் பார்வையாளருக்கு பேசும் உரிமையும் வாக்களிப்பு உரிமையும் கிடையாது. முக்கியமான விவாதங்களில் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனால் கூட்டத்தில் எல்லோருக்கும் தரப்படும் தகவல்கள் பார்வையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றன. அத்துடன் சில வேளைகளில் அதிகாரப்பூர்வ சோதனைகளையும் அவர்கள் முன்வைக்கலாம். பார்வையாளர்களுக்கு சில சலுகைகளும் வசதிகளும் தரப்படுகின்றன. அதேவேளையில் சிறியளவில் கடமையும் உண்டு. உறுப்பு நாடுகளுக்கு உள்ள சட்டரீதியான தகுநிலை பார்வையாளர் நாட்டுக்கு கிடைப்பதில்லை. சர்வதேச நிறுவனத்தின் பார்வையாளராக ஆகும் போது அந்த நாடு அந்த சர்வதேச அமைப்பில் உறுப்பு நாடாவதை நோக்கி ஓரடி எடுத்து வைத்துள்ளது என்று லொல்லலாம்.
பார்வையாளர் என்ற தகுதியில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று பார்வையாளர் தாம் கலந்து கொள்ளும் சர்வதேச நிறுவனத்தை பார்வையிடும். அதில் சேரலாமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். மறுபுறம், சர்வதேச அமைப்பு அதன் பார்வையாளர் தன்மையைக் கண்கானித்து அதை அமைப்பின் உறுப்பினராக அங்கீகரிக்கலாமா என்பது பற்றி தீர்மானிக்கும்.
|