தென் சீனாவிலுள்ள கடலோர நகரமான சான் சேனில், ஆடல் பாடல் அகம், முக்கிய பொழுதுப்போக்கு இடமாகும். 20 ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சான் சேனின் ஆடல் பாடல் அகங்கள், உயர் நிலை கலைக் கூடங்களாக மாறியுள்ளன. இதில், தேசிய இன ஆடலை வடிவமைத்த நடனக்கலைஞர் வாங் பி யுனின் பங்களிப்பு முக்கியமானது.
தேசிய இன ஆடலை, சான் சேனின் ஆடல் பாடல் அகங்களில் கொண்டுவருவது, வாங் பி யுனின் முக்கிய பணியாகும். கடந்த 20 ஆண்டுகளில், அவர், சான் சேனில் சீன தேசிய ஆடலை வடிவமைத்து ஆடுவதில் ஈடுப்பட்டு, நாகரிகமான பாடல் ஆடலக பண்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சி செய்தார். எமது செய்தியாளர் அவரின் வீட்டில் சென்று பேட்டி காணும் போது, வல்லூறும் பாம்பும் எனும் நடனத்துக்கு ஆட, அவர் பயிற்சி செய்துகொண்டிருந்தார். வாழ்க்கையைப் பார்ப்பதிலும் அனுபவங்களைத் திரட்டுவதிலும் இருந்தும், முன்பு ஹாங் சேள ஆடல் பாடல் குழுவில் படிக்கும் நேரத்தில் இருந்தும், தனக்கு ஆடலை வடிவமைக்கும் உள்ளுணர்வு கிடைத்ததாக அவர் செய்தியாளரிடம் சொன்னார்.
வாங் பி யுன் குழந்தைப்பருவத்தில் இருந்து ஆடலைக் கற்றுக்கொள்ள துவங்கினார். 14 வயதில் கிழக்கு சீனாவிலுள்ள ஹாங் சேள ஆடல் பாடல் குழுவில் சேர்ந்தார். அப்போது, அவர் அடிக்கடி குழுவினருடன் மலைப் பிரதேசங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று நடனம் ஆடினார். அவருடைய சிறப்பான ஆடல் நிகழ்ச்சிகளை, பார்வையாளர்கள் பெரிதும் வரவேற்றனர். வாழ்க்கைப் பிரச்சினைகள் இருந்த போதிலும், தனக்கும், ஆடலுக்குமிடையே ஆழமான உணர்வை உருவாக்கி கொண்டதாக, வாங் பி யுன் உணர்ந்தார்.
ஹாங் சேள நகரிலுள்ள சி ஹு ஏரியின் புகழ்பெற்ற காட்சி, அவர் வடிவமைத்த முதலாவது ஆடலின் உள்ளுணர்வு ஆகும். சி ஹு ஏரியில் மூன்று கோபுரங்கள் இருக்கின்றன. ஒரு இரவில், வாங் பி யுன் ஏரி பக்கத்தில் நடந்தார். அழகான நிலா ஒளியில், வெள்ளை கோபுரங்கள் ஏரியின் மையத்தில் அமைதியாக நிற்பதைக் காண்ட போது, அவர் உள்ளுணர்வைப் பெற்றார். அவர் ஏரி பக்கத்தில் நடனம் ஆடினார். அப்போதைய நிலைமையை நினைவு கூரும் போது அவர் கூறியதாவது:
அப்பொழுது, ஒரு கப்பல் தொழிலாளி வந்தார். சி ஹு ஏரி பற்றிய நடனத்தை ஆடுகின்றீர்களா என அவர் கேட்டார். நான் உடனடியாக அழுதேன். அதன் பொருள், வாழ்க்கையே, படைப்புகளின் மூலக்கரும் என்றார் வாங் பி யுன்.
இந்த ஆடல், 1980ம் ஆண்டின் தேசிய ஆடல் போட்டியில் பெரிய பரிசு வென்றது. அதற்கு பின்பு, வாழ்க்கையில் இருந்தே உள்ளுணர்வு பெறுவதில் அவர் ஊன்றிநிற்கின்றார்.
1987ம் ஆண்டு, அவர் சென் சேன் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது, ஆடல் பாடல் அகம், துவக்க வளர்ச்சியில் இருந்தது. அதன் ஆடல் நிகழ்ச்சி, கீழ் நிலையில் இருந்தது. அழகான சீன தேசிய இன நடனத்தை, ஆடல் பாடலகத்தில் ஆட வேண்டும் என, அவர் நினைத்தார். இதனால், அவர் அப்போது சென் சேனில், அளவு மிக்க சா து எனும் ஆடல் பாடலகத்தில் தங்கி, தேசிய இன ஆடலைப் பயன்படுத்தி, இன்பமான ஆடல் பாடலகப் பண்பாட்டை உருவாக்க தீர்மானம் செய்தார்.
|