• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-23 21:45:06    
சீனாவின் பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி

cri

சீன மக்கள் குடியரசின் 10வது தேசிய விளையாட்டுப் போட்டிக்கான ஒளிப்பந்த அஞ்சலோட்டத்தின் துவக்க விழா, ஆகஸ்ட் திங்கள் 12ஆம் நாள் முற்பகல் பெய்சிங்கில் நடைபெற்றது. சீனத் தேசிய மக்கள் பேரவைத் தலைவர் வூ பாங் கோ ஒளிப்பந்தம் ஏற்றினார். இந்த ஒளிப்பந்தம் 31 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், மாநகரங்கள், மற்றும் ஹாங்காங் மகௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் வழியாக எடுத்துச் செல்லப்படும். ஒரு கோடி மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று மதிப்பிடப்படுகின்றது. செப்டம்பர் திங்கள் 20ஆம் நாள் பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ள சியாங்சு மாநிலத்தின் தலைநகரான நான்சிங் நகருக்கு இது கொண்டு செல்லப்படும். பத்தாவது தேசிய விளையாட்டுப் போட்டி அக்டோபர் 12ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை நடைபெறும்.

தடகளப் போட்டி பத்தாவது உலகத் தடக்களச் சாம்பியன் பட்டப் போட்டி ஆகஸ்ட் 14ஆம் நாள் பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் மொத்தம் மூன்று உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டன. உலகத் தடகள சாம்பியன் பட்டப் போட்டியின் பத்து விளையாட்டுக்களில் புதுச் சாதனைகள் நிகழப்பட்டன. சீன விளையாட்டு வீரர்கள் ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்று 9ஆம் இடம் வகிக்கின்றனர். அமெரிக்க அணி 14 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று முதலிடம் வென்றது. மொத்தம் 209 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 1900க்கும் அதிகான விரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டி 23வது உலக கோடைக்கால பல்கலைக்கழக மாணவர்கள் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 11ஆம் நாள் துருக்கியின் கடலோர நகரான இத்மீர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் தடக்களம், நீச்சல், வாலிபால் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் உள்ளன. 170 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் பத்தாயிரம் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். சீனாவின் 201 பல்கலைக்கழக மாணவர்கள், தடகளம், நீச்சல், கால்பந்து, கூடைப்பந்து, வாலிபால் முதலிய 11 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு, 10முதல் 15 தங்கப் பதக்கங்களை பெற முயற்சிப்பார்கள்.

14ஆம் நாள் இப்போட்டி 5ஆம் நாளான 14ஆம் தேதி, சீன வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களை வென்றனர். ஆடவர் இரட்டையர் மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பில் சீன வீரர்களான பொங் போ, வாங் கே நான் ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிர் ஒரு மீட்டர் பாய்ச்சல் பலகை நீர் குதிப்பில் சீன வீராங்கனை வூ மின் சியா தங்கப் பதக்கம் பெற்றார். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் தனிநபர் பன்முகத் திறன் போட்டியில் சீன வீராங்கனை ஃபான் யே சாம்பியன் பட்டம் பெற்றார்.