• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-25 20:44:08    
வாலிபால்

cri

3வது WAGNER கோப்பைக்கான சர்வதேச ஆடவர் வாலிபால் அழைப்புப் போட்டி ஆகஸ்ட் 14ஆம் நாள் போலந்தில் நிறைவடைந்தது. சீன அணி 3-0 என்ற செட் கணக்கில் நார்வே அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடம் பெற்றது. நெதர்லாந்து அணி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் வென்றது. சீனா,  போலந்து,  நெதர்லாந்து, நார்வே ஆகிய நான்கு அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.

பௌலிங் 12நாட்கள் நீடித்த முதலாவது உலக மகளிர் பௌலிங் சாம்பியன் பட்டப் போட்டி ஆகஸ்ட் 14ஆம் நாள் டென்மார்க்கின் ஓல்பொக் நகரில் நிறைவடைந்தது. சீன வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். யாங் சுய் லிங் மாஸ்டர் பிரிவின் சாம்பியன் பட்டம் வென்றார். அவருடைய அணி தோழியர் சாங் யு ஹொங் தனியார் பிரிவின் இரண்டாம் இடம் பெற்றார். மொத்த 40க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

THE FLAG FOOTBALL 2005ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான THE FLAG FOOTBALL போட்டி ஆகஸ்ட் 18ஆம் நாள் முதல் 20ஆம் நாள் வரை பெய்சிங்கில் நடைபெறும். 10 நாடுகளைச் சேர்ந்த 70க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வர். அதிகாரப்பூர்வ போட்டியுடன் ஒப்பிடும் போது, இந்த போட்டியில் எதிர் அணியினரைத் தள்ளக் கூடாது, கட்டக் கூடாது. பாதுகாப்பு ஆட்டக்காரர் தாக்குதல்காரரின் இடுப்புப் பட்டையில் உள்ள இடுப்புக் கொடியை இழுத்து எடுத்தால், தாக்குதல் தடுக்கப்பட்டதாக அர்த்தம். இது மிகவும் பாதுகாப்பான மோதல் இல்லாத ஒரு விளையாட்டாகும்.

டென்னிஸ் டென்னிஸ் மாஸ்டர் போட்டியின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் திங்கள் 14ஆம் நாள் கனடாவின் மொன்டிரியல் நகரில் நிறைவடைந்தது. 19வயதான ஸ்பெயின் வீரர் RAFAEL NADAL 2-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் புகழ் பெற்ற வீரர் அகாசியைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றார்.

நேற்றிரவு அமெரிக்காவின் ஆனஹெம் நகரில் நடைபெற்ற 14வது உலக பூப்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில், சீன அணி பெரும் வெற்றி பெற்றது. மகளிருக்கான இரட்டையர் இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகள் யாங் வெய், சாங் ஜெ வென் ஜோடி 2-0 என்ற செட் கணக்கில் சக நாட்டவர்களான கௌ லிங், ஹுவாங் சுய் ஜோடியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதி போட்டிகளில் சீன வீராங்கனைகள் சாங் நிங்கும் சியே சிங் பாங்கும் தத்தமது எதிராளியை தோற்கடித்து, இறுதி போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். தவிரவும், ஆடவருக்கான ஒற்றையர் போட்டியில் கலந்துகொள்ள சீன வீரர் லின் டான் தகுதி பெற்றார். கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப் போட்டியில் தகுதியை சீன வீரர் சியே சுங் போ, சீன வீராங்கனை சாங் யா வென் ஜோடி பெற்றுள்ளது.