 கலை... ராஜா எனக்கு ரெண்டுநாளா வயிற்று வலி. என் கணவர்கிட்ட சொன்னேன். அவர் மாத்திரை போட்டுக் கொ சரியாப் போகும்னு சொன்னார்.
ராஜா..அய்யோ அதுதான் ஆபத்து. எல்லா நோய்களும் மாத்திரை போடுவதால் குணமாகும்னு சொல்ல முடியாது. தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது நோய் நாடி நோய் முதல் நாட்டிற்கு என்ன பொருள்னு சொன் என்ன நோய் என்று பார்த்து அது எதனால் உண்டானது என்று பார்த்து அதைத் தீர்ப்பதற்கு வழி காண்பது தான் மருத்துவம் சரி, நீங்க மருத்துவ மனைக்கு போய் மருத்துவர்கிட்டே உங்க உடம்பைக் காட்டுனீங்களா?
கலை... கஷ்டம். மருத்துவர்கிட்ட போனா பொம்ப நேரம் விரயமாகும்.
ராஜா...அது தான் தம்பு. டாக்டர்கிட்ட காட்டுறதை விட மருந்துக்கடையில் போய் சொன்னா, அவங்க ஏதாவது ஆனஅட்டிபயாட்டிக் மருந்து தருவாங்க நோய் சரியாப் போகும்னு ஒரு கருத்து பெரும்பாலான மக்களிடம் இருக்குது.

கலை....ஆண்டிபயாட்டிக் என்றால் என்ன?
ராஜா....நோய் உண்டாக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட உயிரியை அதாவது கிருமியைக் கொல்லும் மருந்து தான் ஆன்ட்டிபயாட்டிக். சிதுல இரண்டு வகைகள் இருக்குது. ஒண்ணு, குறிப்பிட்ட ஒரு சிருமியை மட்டும் சொல்லக் கூடியது. இது விலை மலிவு. இன்னொண்ணு பலகிருமிகளை ஒரே நேரத்தில் கொல்லக் கூடியது. இதன் விலை அதிகம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அமெரிக்கா துப்பாக்கி வாங்குறது ரொம்பவும் சுலபமாம் விலை அவ்வளவு மலிவாம். ஆனால் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து வாங்குறது ரொம்ப கஷ்டம்னு சொல்றாங்க.
கலை...சீனாவுல நிலைமை நேர்மாறா இருக்குது. சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியது. அதுல சீனாவில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு நோயாளிகள் ஆன்டிபயாட்டிக் மருந்து போட்டுக் கொள்கிறாராகளாம். இவர்களில் 58 விழுக்காடு நோயாளிகளுக்கு பல கிருமிகளைக் கொல்லும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்து தரப்படுதாம். இது உலக சராசரியில் 30 விழுக்காடு என்று சொல்லப்படுகின்றது.
ராஜா....சரிதான் ஆனால் ஆன்ட்டிபயாட்டிக் எடுப்பதால பக்கவிளைவுகள் ஏற்படுது தெரியுமா?

கலை. அதென்ன பக்கவிளைவுகள் ?
ராஜா....நீங்க வயிற்றுவலினஅனு சொன்னஈங்க. அதுக்கு ஒரு ஆன்ட்டிபடாய்யிக் போட்டீங்கன்னா வயிற்றுவலி குணமாகும். ஆனா உடம்புல இன்னொரு இடத்துல இன்னொரு நோய் வந்து விடும் பொதுவாக சிலருக்கு அலர்கி என்கிற ஒவ்வாமை நோய் உணஅடாகும். உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வும்படி ஒவ்வோர் ஆண்டும் சீனாவில் சுமார் 2 லட்சம் நோயாளிகள் ஆன்ட்டிபயாட்டிக் பக்கவிளைவினால் இறக்கிறார்கள். இவர்களில் 80 ஆயிரம் போர் இறப்பது ஆன்ட்டிபயாட்டிக் மருந்தை தவறாகப் பயன்படுத்துவதால் என்று கண்டறியப்பட்டுள்ளது.
|