• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-29 18:21:15    
ஜியாங் சி மாநிலத்தில் சூழல் வளர்ச்சி

cri

முக்கிய முதலீட்டு திட்டப்பணிகளுக்கு சேவை புரிந்து, தொழில் நிறுவனங்களின் புகார்களை கவனிப்பதற்கு மாநில அரசில் சிறப்பு பணியாளர்கள் உள்ளனர் என்று அவர் விளக்கிக்கூறினார். அவர் கூறியதாவது:

"இந்த 67 திட்டப்பணிகளை நாங்கள் வகைப்படுத்தி, சீர்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு திட்டப்பணிக்கும் பொறுப்பாளரை அனுப்பியுள்ளோம். இப்பொறுப்பாளர்கள், திட்டப்பணிகளை பன்முகங்களிலும் தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்த வேண்டும்" என்றார் அவர்.

Jiang Xi மாநிலம் கொண்டு வரும் அதிகப்படியான முதலீட்டு திட்டப்பணிகள், இம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. Jiang Xi மாநிலத்தின் தொடர்புடைய வாரியம் இதில் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சி போக்கில் ஏற்படும் அனுபவத்தையும் படிப்பினையையும் Jiang Xi மாநில மக்கள் வகுத்து, உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்பை படிப்படியாக வலுப்படுத்தியுள்ளனர்.

வட மேற்கு Jiang Xi மாநிலத்தில் உள்ள Yi Chun நகர், முன்னதாக Jiang Xiயின் தானிய களஞ்சியம் என போற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதார மைய நகரை உருவாக்கும் வளர்ச்சி திட்டத்தை Yi Chun நகர் உறுதிப்படுத்தியுள்ளது. நகரமயமாக்கம் விரைந்து நடைபெற்றுள்ளது. பல்வகை முதலீட்டு திட்டப்பணிகள் இந்நகரில் நுழைந்துள்ளன. இந்நகரின் அதிகாரி Liu Mi செய்தியாளரிடம் கூறியதாவது, வளர்ச்சியின் துவக்கத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்து இல்லை என்பதால், சிமென்ட் ஆலை, கட்டிடப் பொருள் ஆலை உட்பட மோசமான மாசுபடுத்தும் திட்டப்பணிகளை Yi Chun நகர் நிறுவியிருந்தது. உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு, குறிப்பாக நீர் சூழலுக்கு இவை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் மேலும் கூறுகிறார்:

"துவக்கத்தில், எந்த ஒரு தொழில் நிறுவனமும் வரவேற்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை நாங்கள் கருத்தில் கொள்ள வில்லை. பின்னர், இப்பிரச்சினையைக் கண்டறிந்தோம். தொழிற்துறையை வளர்ப்பதில், குறிப்பிட்ட சில தெரிவு முறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது." என்றார் அவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்து வலுப்பட்டு, தற்போது, உணவு பொருள் உற்பத்தி, மின்னணு தகவல் போன்ற சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படும் திட்டப்பணிகளை Yi Chun நகர் நிறுவியுள்ளது. இதனிடையே, முன்னதாக பரிசீலனை செய்து, அங்கீகரிக்கப்பட்ட மோசமான மாசுண்டாக்கும் திட்டப்பணிகளை சீர்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு இவற்றினால் உண்டாகும் பாதிப்பை குறைத்துள்ளது என்று Liu Mi கூறினார்.