• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-31 18:48:20    
தமிழ் மூலம் சீனம் பாடம் 33

cri
வணக்கம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்தித்துள்ளோம். எப்படி நலமா?

கடந்த முறை, நாம் ஒரு உரையாடலை படித்தோம். நீங்கள் பயிற்சி செய்தீர்கள். முதலில் இந்த உரையாடலை மீண்டும் பார்ப்போம்.

DUI BU QI, TAI MA FAN NIN LE!

BIE KE QI, BIE KE QI!

இந்த உரையாடலை புரிந்ததா, புரியவில்லை என்றால் பரவாயில்லை. அதன் தமிழாக்கத்ததை இப்போது தருகின்றோம்.

DUI BU QI, TAI MA FAN NIN LE!

உங்களுக்கு அதிக தொந்தரவு, மன்னித்துக் கொள்ளுங்கள்

BEI KE QI, BIE KE QI!

பரவாயில்லை

இங்கு BIE KE QI என்ற வாக்கியத்துக்குப் பதிலாக, BU KE QI, BU YAO KE QI என்றும் சொல்லலாம். BIE, BU, BU YAO ஆகிய மூன்று சொற்களும் ஒரே பொருள். கூடாது, வேண்டாம் என்று பொருள் தான்.

இப்பொழுது BEI KE QI என்ற வாக்கியத்துக்கு பதிலாக BU KE QI என்ற வாக்கியத்தை உரையாடலில் போட்டு பார்ப்போம்.

DUI BU QI, TAI MA FAN NIN LE!

BU KE QI, BU KE QI!

BU YAO KE QI என்ற வாக்கியத்தை உரையாடலில் போட்டு இப்போது பயிற்சி செய்கின்றோம்.

இந்த உரையாடலை பாடத்துக்குப் பின், நீங்கள் பயிற்சி செய்து பார்ருங்கள்.

இப்பொழுது ஒரு புதிய உரையாடலை படிக்கின்றோம். இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் 20 பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ளது.

முதலில் இரண்டு சொற்களை பார்க்கின்றோம்.

ZAI JIAN—வணக்கம்

இந்த சொல் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்தது.

MING TIAN JIAN--நாளை சந்திப்போம்

நீங்கள் ஒரு சீனரிடம் விடைபெறும் போது, இந்த இரண்டு சொற்களை சொல்லலாம்.

இப்பொழுது ஒரு உரையாடலை பார்க்கின்றோம். இதுவும் விடைபெறும் போது பயன்படுத்தப்படுகின்றது.

ZAI JIAN, HUAN YING NIN ZAI LAI!

XIE XIE, ZAI JIAN!

இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு—

ZAI JIAN, HUAN YING NIN ZAI LAI!

வணக்கம், மீண்டும் வருக!.அல்லது மீண்டும் வருவதை வரவேற்கின்றோம்.

XIE XIE, ZAI JIAN!

நன்றி வணக்கம்!

இந்த உரையாடலில் ZAI என்றால், மீண்டும் என்பது பொருள். LAI என்றால் வா என்பது பொருள். ZAI LAI என்றால் மீண்டும் வருவது. எடுத்துக்காட்டாக, HUAN YING ZAI LAI ZHONG GUO, சீனாவுக்கு மீண்டும் வருவதை வரவேற்கின்றோம். நாங்கள் இந்தியாவை விட்டு புறப்படும் போது நீங்கள் எங்களிடம், HUAN YING ZAI LAI YIN DU என்று சொல்லலாம்.

இன்று நாம் ஒரு புதிய உரையாடலை படித்துள்ளோம். இது விடைபெறும் பொது பயன்படுத்தப்படுகின்றது. இரண்டு மிகவும் எளிதான வாக்கியங்கள். உண்மையில் நாம் முன்னதாக ஏற்கனவே படித்திருக்கின்றோம். HUAN YING NIN LAI WO JIA என்ற வாக்கியம் தங்கள் நினைவில் இன்னும் இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன். பாடத்துக்கு கண்டிப்பாக பயிற்சி செய்யுங்கள்.