• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-30 08:36:01    
உலகப் கோப்பைக்கான சீன இலக்கு சுடும் அணி

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற வீரர்கள் இடம்பெறும் சீன இலக்கு சுடும் அணி ஆகஸ்ட் திங்கள் 23ஆம் நாள் பெய்சிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, உலக கோப்பைக்கான இலக்கு சுடும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள ஜெர்மனியின் முனிக் நகருக்குச் செல்கின்றது. இது உலகில் மிக உயர்நிலை போட்டியாகும். தலைமை பயிற்சியாளர் வாங் யீ பு தலைமையிலான விளையாட்டு வீரர்கள் மகௌவில் கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட பின், 24ஆம் நாள் ஜெர்மனிக்குச் செல்கின்றுள்ளனர். சீன அணியில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில், து லீ, சூ ச்சி நான், ஜியா சான் போ ஆகிய மூவர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் 9 நகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலும் கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த இறுதிப் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை தூலியும் சீன வீரர் சூ ச்சி நானும் முறையே பெண் ஆண் ரைபில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொள்வார்கள். இருவரும் இவ்வாண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினர்.

சீன வீரர் ஜியா சன் போ, இவ்வாண்டு உலக கோப்பைக்கான போட்டிகளில் 8வது இடம் பெற்ற போதிலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பெற்றவரான அவரும் ஆடவருக்கான ரைபில் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். இவ்வாண்டின் துவக்கத்தில் சீனத் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்ற வாங் யீ பு இவ்வாண்டின் உலக கோப்பைக்கான போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. எனவே, ஆடவருக்கான கை துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை கைவிட்டார். இந்த இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்றுள்ள இதர 12 விளையாட்டு வீரர்களில், சௌ யிங் ஹுய், வூ லியு சி, துங் சின், சென் யிங், பெய் பெங் ச்சி, சாங் பு, லியூ காங், யாங் துங் மிங், சாங் பெங் ஹுய், தான் சோங் லியங், சாங் தியன் ஆகியோர் உள்ளனர். இவ்வாண்டின் உலக கோப்பைக்கான பல்வேறு சுற்று ஆயத்த போட்டிகளில் சீன வீரர் மற்றும் வீராங்கனைகள் மொத்தம் 16 தங்க பதக்கங்களை பெற்று, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதியை எட்டு பேர் பெற்றனர். உலக கோப்பைக்கான ஒட்டுமொத்த இறுதிப் போட்டி, இவ்வாண்டின் ரைப்பில் மற்றும் கை துப்பாக்கி போட்டிகளின் இறுதி போட்டியாகும். இது இவ்வாண்டின் மிக உயர்நிலை போட்டியும் ஆகும். சாம்பியன் பட்டம் பெற்றவர்கள் உலக சாம்பியனாக விளங்குவார்.