"மேற்கு பகுதியில் நுழைந்து, சீனாவில் முதலீடு செய்வது" எனும் கருத்தரங்கு இன்று மேற்கு சீனாவின் Shan Xi மாநிலத்தின் தலைநகர் Xianவில் துவங்கியது. ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா உள்ளிட்ட 30 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 200 தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர். சீன மேற்குப் பகுதி-சர்வதேச வர்த்தக ஒத்துழைப்பு, மேற்கு பகுதி சுற்றுச்சூழல் மற்றும் முதலீடு, மேற்கு பகுதி வளர்ச்சி பற்றிய சீன அரசின் புதிய கொள்கை ஆகியவை பற்றி பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் ஆழமாக விவாதிக்கின்றனர். இக்கருத்தரங்கின் மூலம், மேற்குப் பகுதி-சர்வதேச வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பின் மேடையை அமைத்து, மேற்கு பகுதியின் வெளிநாட்டு ஒத்துழைப்பின் வாய்ப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்பவர் விரும்புகின்றனர்.
|