சீனாவின் தொலை தொடர்பு அலுவல்
cri
இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சீனத் தொலை தொடர்பு அலுவலின் வருமானம் 36 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தகவல் தொழில் அமைச்சகம் இன்று அறிவித்தது. இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சீனாவில் புதிதாக சேர்ந்துள்ள தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 6 கோடியே 10 லட்சமாகும். சீனா முழுவதும் தொலைபேசி பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 70 கோடியைத் தாண்டியுள்ளது என்று தெரிய வந்தது.
|
|