• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-09-01 11:22:50    
உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டி

cri

ஆகஸ்ட் திங்கள் 25ஆம் நாள் உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டியின் ஒட்டுமொத்த இறுதிப் போட்டியில் ரைப்பிள், மற்றும் கை துப்பாக்கி போட்டிகளின் முடிவு வெளிவந்தது. சீனாவின் இரண்டு இளம் வீரர்களும் நல்ல சாதனை புரிந்தனர். மகளிருக்கான ரைப்பிள் இலக்கு சுடும் போட்டியில் சீன வீராங்கனை வூ லியூ சி தங்கப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கன 50 மீட்டர் கை துப்பாக்கி இலக்கு சுடும் போட்டியில் சீன வீரர் லின் சுங் சு வெள்ளி பதக்கம் வென்றார்.

தகுதிப் போட்டியில் வூ லியூ சி, மூன்று முறை சூட்டுகளில் முறையே 196 புள்ளி, 197 புள்ளி, மற்றும் 193 புள்ளி என்ற சாதனைகளுடன் முதலிடம் பெற்று இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் அவர் முதலாம் சூட்டில் 9.0 புள்ளியை மட்டும் பெற்ற போதிலும், துணிவுடனும் அமைதியான மனநிலையுடனும் இருந்து பிந்திய சூட்டுக்களில் ஒவ்வொரு முறையும் 10 புள்ளிகளை பெற்றார். இறுதிப் போட்டியின் சாதனை 100.5 புள்ளிகளையும் ஒட்டுமொத்த சாதனை 686.5 புள்ளிகளையும் வென்று சீனாவுக்கு ஒரு தங்கப் பதக்கம் பெற்றார்.

இந்த போட்டியில் சீனாவின் பழைய வீரர் தான் சோங் லியங் 50 மீட்டர் கை துப்பாக்கி சூட்டில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. தகுதி போட்டியில் 561 புள்ளிகளையும் இறுதிப் போட்டியில் 95.7 புள்ளிகளையும் மொத்த சாதனை 656.7 புள்ளிகளையம் பெற்று 5வது இடம் மட்டுமே பெற்றார். ஆனால், இளம் வீரர் லின் சுங் சு இந்த நிகழ்ச்சியில் மிக சிறப்பாக விளையாடினார். சீனாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்று தந்தார்.

தகுதிப் போட்டியில் லின் சுங் சு 570 புள்ளிகளுடன் முதலிடம் வகித்தார். ஆனால் இறுதிப் போட்டியில் அவர் அடுத்தடுத்து 9 புள்ளிகளை மட்டும் சுட்டார். அவரும் ரஷியாவின் பழைய வீரர் கோ கோலியேவும் இறுதிச் சூட்டு மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கும் போது, அனுபவம் இல்லாத லின் சுங் சு மனம் அமைதியாக இருக்க முடியாததால், 7.1 புள்ளிகளை மட்டும் பெற்றார். ஆனால் கோகோலியேவு 7.9 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றார்.

முதல் நாள் நடைபெற்ற தகுதி போட்டியில், ஏதென்ஸ் ஒலிம்பிக் சாம்பியனான ஜியா சான் போ ஆடவருக்கான ரைபிள் சுடும் போட்டியில் 1162 புள்ளிகள் என்ற சாதனையுடன் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். அவருடைய அணி தோழரான லியூ காங்கும் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். சீனாவின் மற்றொரு வீரர் சாங் பூ தகுதிப் போட்டியிலே தோல்வியுற்று போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் இறுதிப் போட்டியில் ஜியா சான் போ 94.7 புள்ளிக்களை மட்டும் வென்று 8வது இடம் பெற்றார்.