• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-08-30 15:37:10    
அறிவியல் முறையில் ஆன்ட்டிபயாட்டிக் பயன்பாடு

cri

கலை....மருந்தை எப்படி தவறாகப் பயன்படுத்த முடியும்?

ராஜா....ஆன்ட்டிபயாட்டிக் மருந்துக்கு ஏதோ மந்திர சக்தி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அதனாலதான் காய்ச்சல் என்றதும் உடனே மருந்துக் கடைக்கு ஒடிப்போய் ரெண்டு பாரசிட்டமால் கொடுப்பா என்பார்கள். மருந்துக் கடைக்காரரோ 10 மாத்திரைகள் உள்ள ஒரு பத்தையைக் கொடுப்பார். அதற்கு குறைவாக தரமாட்டார்ய டாகடரிடம் போனால் அவர் இத்தக் காயபச்சல் தெனால் வந்தது என்பதை பரிசோதனைகள் மூலம் கண்டுபிடித்து சரியான ஆன்ட்டிபயாட்டிக் மருந்து சரியான அளவு சொல்வரா அப்புறம் 10 மாத்திரைகள் வாங்கினதும் இதை வீனாக்குவதா என்று நினைத்து நோய் குணமாகிவிட்டால் கூட மீதி உள்ள மாத்திரைகளையும் தின்று விடுகிறார்கள். இதைத் தான் ஆனஅட்டிபயாட்டிக் மருந்தை அளவுக்கு மீறி பயன்படுத்துவது அதாவது ஒவர்டோஸ் மற்றும் தவறாகப் பயன்படுத்துவது என்கிறோம்.

கலை....ராஜா எஹ்க பக்கத்து வீட்டுல வாங் அம்மையாரனு ஒரு அம்மா இருக்கிறாங்க. அவங்க ஒரு மருத்துவ மனைக்குப் போனாங்க. சிறு நீர் பாதையில் நோய் தொற்று என்று சொல்லி மருத்துவர் இரண்டு மருந்துகளை எழுதிக் கொடுத்தார். ஒன்று மலிவானவிலையுள்ள ஆன்ட்டி பயாட்டிக் இன்னொனணு விலை அதிகமாக உள்ள இறக்குமதி செய்யப்பட்ட பல வகையில் செயல்படக் கூடிய ஆனஅட்டிபயாட்டிக் மருந்து.

ராஜா.....அந்த அம்மா எந்த மருந்து வாங்கி னாங்க?

கலை....ிதுல என்ன சந்தேகம்?விலை அதிகமுள்ள இறக்குமதி மருந்தைத் தான் வாங்கினாங்க.

ராஜா...அதுதான் தப்பு. விலை அதிகம் கொடுத்து வாங்குகிற மருந்து சீங்கிரமா குணப்படுத்தும்னு சொல்ல முடியாது. மேலும் ஆன்ட்டிபரயாட்டிக் மருந்து எல்லா நோய்களையும் குணப்படுத்தும் என்று ஒரு நினைப்பு இருக்குது. அது தவறு. குறிப்பிட்ட பாக்டீர்யாகை மட்டுமே அது சொல்லும். குறிப்பாக வைரல் காயச்சல் அல்லது இதர பாக்டீரியா அல்லாத நோய்த் கொல்லுக்களை ஆன்ட்டிபயாட்டிக் மருந்தினால் குணப்படுத்த முடியாது.

கலை....சமீபத்துல ஒரு செய்தி நாளேட்டில் படித்தேன்.சீனப் பேராசிலியர் சான் யுன்சிங் அமெரிக்கா போயிருந்த போது காய்ச்சல் வந்து விட்டது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இருந்த சிறு மருத்துவமனைக்கப் போனார். டாக்டர் பலிசோதனை எல்லாம் முடித்த பிறகு பேசாம வீட்டுக்குபபோய் நிறைய ஓய்வெடுங்க. நிறையத் தண்ணீர் குடிங்க நம்ப முடியவில்லை. இவர் என்ன டாக்டர். ஒரு மருந்து கூட தரவில்லையே என்று நிறைத்தார்.

ராஜா......உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?பெரும்பாலான நோயாளிகள் ஆனஅட்டிபயாட்டிக் மருந்து தராத ஒரு மருத்துவரை டாக்டர் என்று அங்கீகரிப்பதே இல்லை. இவர் என்ன வெத்துவேட்டு என்று எரிச்சல்பட்டு அவரிடம் திரும்பப் போவதில்லை. தில்லியில் எங்க குடும்ப டாக்டர் பிரேமலதா ராவ் அவரிடம் தடும்ம் பிடிச்சிருக்குனு போனால் நல்ல ஓய்வு, வெண்ணீர் ஆவி பிடிங்க நிறைய தண்ணீர்க் குடிங்க தயிர் சாப்பிட வேண்டாம். மூன்று நாளைக்குள் தடுமம் குணமாகாவிட்டால் அப்புறமா வாங்க மருந்து தாரேன் என்று சொல்லி அனுப்பிவிடுவார். ஆனால் சில நோயாளிகள் டாக்டரிடம் போவதர்கு முன்பே ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரை போட்டுக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வேறு வழியினஅறி டாக்டர் அன்டிபயாட்டிக் தர வேண்டும். இந்த ஆன்ட்டிபயாட்டிக் மருந்து மட்டும் அதர்குரிய அளவு அதாவது சோர்ஸ் முழுவதுமாக உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பயன்கிடையாது.

கலை....அப்படியானால் மருந்துச் சீட்டு இல்லாம மருந்து விற்பனை கிடையாது என்று மருந்துக் கடைக்காரர் சொல்ல வேண்டும்.

ராஜா....மருந்தும் விருந்தும் 3 நாள் என்பது பழமொழி. 3 நாட்கள் மருந்து சாப்பிட்டும் குணமாகாவிட்டால் உடம்பை நன்கு பரிசோதிக்க வோயாளிகள் மருத்துவமனைக்குப் போகவேண்டும்.

கலை......அனைத்துக்கும் மேலாக மாத்திரைதான் அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து என்ற நினைப்பை நோயாளிகள் கைவிட வேண்டும். டாக்டர்களும் தங்களுடைய தொழில் தர்மத்தைப் பின்பற்ற வேண்டும். அப்படியானால்தான் மக்களின் நலவாழ்வுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்