ஹாங்காங்கில் திபெத் பண்பாட்டு வாரம் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டதன் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2005 சீன திபெத் பண்பாட்டு வாரம் செப்டெம்பர் 3ந் நாள் முதல் 20ந் நாள் வரை டென்மார்க்கிலும் இத்தாலியிலும் நடைபெறும் என்று சீன அரசவை செய்தி பணியகம் இன்று அறிவித்துள்ளது. இவ்விரண்டு நாடுகளில் திபெத் பண்பாட்டு தொடர்பு பற்றிய ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறை. திபெத்தின் ஆடல் பாடல் அரங்கேற்றம், திபெத்தியல் அறிஞர் மற்றும் வாழும் புத்தர்களின் பிரதிநிதிக் குழுக்களுக்கிடையிலான கல்வியியல் தொடர்பு முதலியவை இவ்வாரத்தில் நடைபெறும். 2001ஆம் ஆண்டு முதல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பெல்ஜியம், கனடா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திபெத் பண்பாட்டு வாரம் நடைபெற்றுள்ளது.
|