திபெத் உருவாக்கத்தின் 40வது ஆண்டு நிறைவு
cri
அடிப்படை அமைதி நிலவும் சூழலில் விரைவாக வளரும் காலகட்டத்தில் திபெத் நுழைந்துள்ளது என்று மக்கள் நாளேடு கூறுகின்றது. சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் நிறுவபட்டதன் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு "மாபெரும் முன்னேற்றத்துடன் நிலையான அமைதி காண்பது"என்ற தலைப்பில் சீன மக்கள் நாளேடு நாளை வெளியிட இருக்கும் தலையங்கத்தில் கடந்த 40 ஆண்டுகளில் பொருளாதர அமைப்புமுறை, கட்டமைப்பு வசதிகள், வருமானம் ஆகியவற்றில் திபெத் மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. திபெதில் வாழ்கின்ற பல்வேறு தேசிய இன மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் தன்னாட்சி பிரதேசத்தின் சுய ஆட்சி முறைமையை மேம்படுத்தி அதன் சமூக பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டும் என்றும் தலையங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
|
|